தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களால் மதரசாவில் படிக்கும் குழந்தைகளுக்கு பரவிய கொரோனா - திணறும் அதிகாரிகள்!
தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களால் மதரசாவில் படிக்கும் குழந்தைகளுக்கு பரவிய கொரோனா - திணறும் அதிகாரிகள்!

கான்பூர் நகரில் மொத்த 170 கொரோனா வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு மூன்று மதரஸாக்களினால் ஏற்பட்டுள்ளது. 53 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெரும்பாலும் 10 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீன் சபையில் கலந்து கொண்டு நகரத்திற்கு திரும்பிய தப்லிகி ஜமாஅத்தின் உறுப்பினர்களால் மதரசா மாணவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் பல்வேறு ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்டாலும், கடந்த 12 நாட்களில் மூன்று மதரஸாக்களிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான பாதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த மதரஸாக்களில் படிக்கும் பல மிகச் சிறிய குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோருக்கு அறிகுறியற்ற நிலையில் பரவியுள்ளது.
கான்பூர் மாவட்டத்தில் கூலி பஜார் மதரஸா மிகப்பெரிய பரவல் பகுதியாக உருவெடுத்துள்ளது. கான்பூரின் மச்சாரியா பகுதியில் உள்ள மற்றொரு மதரஸாவில் குறைந்தது ஏழு வழக்குகள் உள்ளன. இது இப்போது சீல் வைக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.