கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்அப்பில் போலி செய்தி பரப்பிய பெண் கைது..
கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்அப்பில் போலி செய்தி பரப்பிய பெண் கைது..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் 34,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏழு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது இந்தியாவிலும்
வேகமாக தொற்று பரவி வருகிறது.
இதற்காக மத்திய அரசும், மாநில அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சுகாதார துறை தெரிவித்து வருகிறது.
மேலும் சமூக வளையதளத்தில் மக்கள் மத்தியில் போலி செய்தி மற்றும் பொய் தகவல்களை பரப்பும் நபர்களை காவல்துறை கண்காணித்தும் மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் கொரோனா வைரஸ் பற்றிய போலி செய்தியை ஷேர் செய்த்தாக 30 வயது பெண்ணை கைது செய்தனர்.
இதை பற்றி உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: கொல்கத்தாவில் உள்ள பகுதியில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மாநில அரசாங்கம் மறைகிறது எனவும் அந்த பெண் வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்தவர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அந்த செய்தியை வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கும்படி குரூப் அட்மினுக்கு காவல்துறை கூறியுள்ளது.