Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவிலுக்காக 27 ஆண்டுகள் விரதமிருந்த மூதாட்டி.!

ராமர் கோவிலுக்காக 27 ஆண்டுகள் விரதமிருந்த மூதாட்டி.!

ராமர் கோவிலுக்காக 27 ஆண்டுகள் விரதமிருந்த மூதாட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Aug 2020 2:19 AM GMT

1992ஆம் ஆண்டில் ஜபல்பூர் வாசியான ஊர்மிளா சதுர்வேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை உணவு உண்ணாமல் விரதம் கடைபிடிப்பது என்று முடிவு செய்தார். 81 வயதான ஊர்மிளா மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் விஜய் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 1992 ஆம் ஆண்டின் பாப்ரி மஸ்ஜிதின் சர்ச்சைக்குரிய கட்டமைப்பு வீழ்த்தப்பட்டு, நாட்டில் கலவரம் ஏற்பட்டபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கும் வரை பால் பழங்களை மட்டுமே சாப்பிடுவேன் என்று சபதம் செய்தார். ராமர் கோவில் கட்டப்படும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போதாகவும் உறுதிமொழி எடுத்தார். முதன்முதலில் 2019 நவம்பரில் இந்திய உச்ச நீதிமன்றம் ராம் லல்லா விராஜ்மானுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியதுடன் கோயில் கட்டுமானத்தை கவனித்துக்கொள்ள ஒரு அறக்கட்டளை அமைக்க இந்திய அரசுக்கு உத்தரவிட்டது.

ஊர்மிளாவின் மகன் அமித் சதுர்வேதி கூறுகையில், "எனது தாய் 27 ஆண்டுகளாக பழம் மற்றும் பால் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டார். இதை தொடங்கும்போது அவருக்கு 54 வயது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவரேக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது" என்று கூறினார்.

28 வருட உண்ணாவிரதத்திற்கு பிறகு பகவான் ராமரின் ஆசீர்வாதங்களை பெற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறிய நிலையில் உண்ணாவிரதத்தின் போது அவருக்கு ஆதரவளித்த குடும்பத்தினர் இறுதியாக அவர் உணவுப் பொருட்களை சாப்பிடுவார் என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். இவர் 28 ஆண்டுகளாக பழங்களை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த விரதம் முடிவுக்கு வந்ததை எண்ணி ஊர்மிளா சதுர்வேதி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த முடிவு வருவதற்கு 28 ஆண்டுகள் ஆனது என்று கூறிய அவர், ஆனால் ராமர் கோவில் அதற்கு உரிமையான இடத்தில் அமையப் போகிறது என்றும் அவர் நிம்மதி அடைவதாகக் கூறியுள்ளார். இந்த 28 ஆண்டுகளில் அவர் நோன்பு காரணமாக பல உறவினர்களை இழந்தார். எனினும் அவரது குடும்பத்தினரின் ஆதரவு எப்போதும் அவருக்கு இருந்தது.

அவரது தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்காக பலமுறை விருது வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை அயோத்தியாவுக்கு அழைத்துச் செல்லவும் விரைவில் சரயு ஆற்றின் கரையில் விரதத்தை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஊர்மிளா சதுர்வேதி தனது குடும்பத்தினருடன் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க விரும்பினாலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக அவரது திட்டம் சீர்குலைந்தது என்று கூறினார்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக ஆகஸ்ட் 5 ஆம் தேதியை ராம் ஜன்ம பூமி அறக்கட்டளை இறுதி செய்துள்ளது. இந்தப் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்வார் என்றும் அஸ்திவாரத்தில் 22.6 கி.கி வெள்ளி செங்கல் வைப்பார் என்றும் கூறியுள்ளனர். இந்த விழாவில் பல முக்கிய தலைவர்கள் மற்றும் மகான்களும் பங்கேற்க உள்ளனர்.

ஆகஸ்ட் 5ம் தேதி பகவான் ராமரின் உருவப்படங்கள் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகம் ஏற்பாடு செய்து வருகிறது.



source : https://www.opindia.com/2020/08/urmila-chaturvedi-jabalpur-28-year-fast-fruit-ram-mandir-bhoomi-pujan/amp/?__twitter_impression=true

Next Story
கதிர் தொகுப்பு
Trending News