Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்த முதல் பெண் தமிழகத்தை சேர்ந்தவர்

சர்வதேச மகளிர் தினத்தன்று தனது சமூக ஊடக கணக்குகளை 7 சாதனை பெண்கள் நிர்வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், முதல் பெண்ணாக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் பிரதமரின் கணக்கில் இருந்து ட்வீட் செய்துள்ளார்.

பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்த முதல் பெண் தமிழகத்தை சேர்ந்தவர்
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 March 2020 12:57 PM IST

சர்வதேச மகளிர் தினத்தன்று தனது சமூக ஊடக கணக்குகளை பெண்கள் நிர்வாகிப்பார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், முதல் பெண்ணாக தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ், பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனது சாதனைகளை மக்களிடையே பகிர்ந்துள்ளார்.

ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்துகொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கின் வழியே எடுத்துக்கூறினார்.

இதன் மூலம் பெண்கள் மட்டும் அல்லாது குறிப்பாக தமிழர்கள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள பற்று வெளிப்படையாகியுள்ளது. ட்விட்டர் வாசிகள் கேட்கும் கேள்விகளுக்கும் சினேகா மோகன்தாஸ் பிரதமரின் ட்விட்டர் கணக்கு மூலம் பதிலளித்து வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News