பெண்கள் டி20 உலக கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது!
பெண்கள் டி20 உலக கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது!

ஆஸ்திரேலியாவில் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் லீக் போட்டிகள் முடிந்து இன்று அரை இறுதி போட்டி துவங்குகிறது. இரு அரை இறுதி போட்டி இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது.
இதில் குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தில் இந்தியா அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் தென்னாபிரிக்கா அணியும், இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றன.
குரூப் ஏ பிரிவில் உள்ள முதல் அணியும் - குரூப் பி பிரிவில் உள்ள இரண்டாவது அணியும் மோதும். குரூப் ஏ பிரிவில் உள்ள இரண்டாவது அணியும் - குரூப் பி பிரிவில் உள்ள முதல் அணியும் மோதும்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே அரை இறுதி போட்டி இன்று நடைபெற இருந்தது. ஆனால் மழை பெய்த காரணத்தால் டாஸ் கூட போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணத்தால் புள்ளி கணக்கு அடிப்படையில் பட்டியலில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தில் இருந்த இந்தியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
மற்றோரு போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் அடித்தது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய தயாரானபோது மழை பெய்தது. மழை நின்றவுடன் . இதனால் டக்வோர்த் லூயிஸ் முறை படி தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு வெற்றி இலக்காக 13 ஓவரில் 98 ரன்கள் அடிக்கவேண்டும்.
தென்னாபிரிக்கா அணி 13 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் அடித்ததால் ஆஸ்திரேலியா ஐந்து ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.