Kathir News
Begin typing your search above and press return to search.

உலகை அதிர வைத்த மரண சம்பவம் : மூன்று பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை!

உலகை அதிர வைத்த மரண சம்பவம் : மூன்று பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை!

உலகை அதிர வைத்த மரண சம்பவம் : மூன்று பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 March 2020 4:47 PM IST

சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதியாய் செல்கிறார்கள். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளின் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். மேலும் சில நேரத்தில் இந்த பயணம் மிகவும் ஆபத்தான விபத்தில் முடிகிறது.

இந்த நிலையில் சென்ற 2015ஆம் ஆண்டு சிரியா அகதிகள் பயணம் செய்த படகு துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்து ஆனது. அதில் மூன்று வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உள்ளிட்ட 12 பேர் பலியானார்கள்.


அந்த மூன்று வயது குழந்தை துருக்கிக் கடற்கரையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே அதிர வைத்தது. இந்த படகு விபத்திற்கு காரணமான 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வழக்கின் விசாரணையின் முடிவில் 3 பேர் மீது இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது. அந்த தீர்ப்பில் மூன்று பேருக்கும் 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News