வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற எஸ்.வங்கி ராணாகபூர் மகள்: விமான நிலையத்தில் பிடித்த அரசு !
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயன்ற எஸ்.வங்கி ராணாகபூர் மகள்: விமான நிலையத்தில் பிடித்த அரசு !

நிதி மோசடிகள், நிர்வாக சீர்கேடுகள், வேண்டுமென்றே வாராக்கடன்களை உருவாக்கியது இதன் மூலம் செயற்கை நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தி வங்கியை திவால் நிலைக்கு கொண்டு சென்ற எஸ்.வங்கி நிறுவனர் ராணாகபூர் பல்வேறு விசாரணைகளுக்கு அடுத்து நேற்று அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிறுத்தி காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் வாடிக்கையாளர்களை காப்பாற்ற மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எஸ்.வங்கி யை கொண்டுவந்துள்ளது.
இந்த நிலையில், இவர் முறைகேடுகள் செய்து சுருட்டிய வங்கி பணத்தை பல நாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்கி இருக்கலாம் எனகருத்தப்படும் நிலையில், ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி கபூர் டான்டன், ராதா கபூர் மற்றும் ரோஷிணி கபூர் ஆகியோரை தேடப்படும் நபர்களாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் நேற்று மாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் நகருக்கு செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.