பணத்தை எங்கெல்லாம் கொண்டு சென்றீர்கள்? எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அதிகாரிகள் கிடுக்கிப் பிடி விசாரணை!
பணத்தை எங்கெல்லாம் கொண்டு சென்றீர்கள்? எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அதிகாரிகள் கிடுக்கிப் பிடி விசாரணை!

2004 ஆம் ஆண்டில் வங்கி சேவைகள் துவங்க அனுமதி கிடைத்தது முதல் எஸ் வங்கி வியாபார ரீதியாக கிடு கிடு வளர்ச்சியை கண்டது. அதற்கு முக்கியக் காரணம் அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் வங்கியின் வளர்ச்சிக்காக கடைபிடித்த வியாபார யுக்திகள் தான்.
2004-2012 காலகட்டத்தில் நிகழ்ந்த வங்கித் துறை முறைகேடுகளைத் தான் எஸ் வங்கியின் வீழ்ச்சி பிரதிபலிக்கிறது. தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக கொடுக்கப்படவேண்டிய கடன்கள் வரைமுறையற்று பல்வேறு மோசமான நிறுவனங்களுக்கு எந்த விதமான அடிப்படை விதிகளையும் பின்பற்றாமல் கடன்கள் வழங்கப்பட்டதால் அவை வாராக்கடன்களாக மலைபோல வளர்ந்து நிற்கின்றன.
இந்த நிலையில், பல மோசடி நிறுவங்களுடன் கைகோர்த்துக்கொண்டு வங்கியின் நிறுவனர் பணத்தை முறைகேடாக வெளிநாடுகளுக்கு மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகமும் இப்போது வலுத்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
யெஸ் வங்கியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை, அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.