நடந்தது போனால் போலீசுக்கு சந்தேகம் வராது என நினைத்து மது பாட்டில்களுடன் மாட்டிக்கொண்ட இளைஞர்கள்.!
நடந்தது போனால் போலீசுக்கு சந்தேகம் வராது என நினைத்து மது பாட்டில்களுடன் மாட்டிக்கொண்ட இளைஞர்கள்.!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் அனைத்து வகையான மதுபானக்கடைகளும் மூடி உள்ள நிலையில், அவ்வப்போது சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்தவர்களையும், 28க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள தவளக்குப்பம் போலீசார் தவளக்குப்பம் 4-முனை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ௫ பேரை போலீசார் விசாரிக்க முயன்ற போது, அதில் ௩ பேர் தப்பி ஓடினர். மேலும் இருவரை பிடித்து சேதனை செய்தபோது அவர்கள் வைத்து இருந்த பையில் விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது, அவரகள் இருவரும் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், மது பாட்டிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்து ரூபாய் 8ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 17ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மூவரையும் தேடி வருகின்றனர்.