Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயன் நடிக்கும் "ஹீரோ" படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் "ஹீரோ" படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2019 9:28 AM GMT


2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் "ஹீரோ", ரசிகர் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களை கூட வெளியிடாமலேயே ஒரு படம் தன் மீதான வெளிச்சத்தை அப்படியே தக்க வைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாகும்.


படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, "ஆம், போஸ்டர்களும் காட்சி விளம்பரங்களும் ஒரு திரைப்படத்தை அதிக அளவில் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் 'ஹீரோ'வைப் பொருத்தவரை, ஆரம்ப கட்டத்திலிருந்தே படக்குழுவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறது.


டிசம்பர் 20ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருப்பது குறித்து அவர் மேலும் கூறும்போது, "மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்ப கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை நினைத்த மாதிரி உருவாக்க சரியான காலம் தேவை.


இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News