Top
undefined
Begin typing your search above and press return to search.

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுடன் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் அமெரிக்காவில் வைரல் - உண்மை என்ன?

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுடன் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் அமெரிக்காவில் வைரல் - உண்மை என்ன?

Arjunan IlayarajaBy : Arjunan Ilayaraja

  |  18 May 2020 5:19 AM GMT

அய்யோ சாமி நம்ம ஊர் அரசியல்வாதிகள் தேவலாம் போல உள்ளது அமெரிக்காவின் நிலை. அமெரிக்காவில் இந்த வருடம் அதிபர் தேர்தல் வர உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பிரச்சாரத்தை துவக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகளாவிய பயங்கரவாத சூத்திரதாரி ஒசாமா பின்லேடனுடன் கைகுலுக்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தனது இளைய நாட்களில் காட்டி தழுவியதாக கூறப்படும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் கோட்சூட் அணிந்து சிரிப்பதை போன்று உள்ளது அந்த புகைப்படம்.

பின்லேடனை நன்கு அறிந்தவர் டிரம்ப் என்றும் பின்லேடனை அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ந்ததாகவும் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தை தகர்க்க காரணமான ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை சுட்டு வீழ்த்தியது.

சமூக வலைதள பயனர்கள் டொனால்டு டிரம்ப் ஒசாமா பின்லேடன் ஒன்றாக இருப்பதை போன்ற புகைப்படத்தை திட்டமிட்டு பகிர்ந்து வருவதாகவும் அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய செயலை செய்கின்றனர் எனவும் அமெரிக்க அதிபர் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story