Top
undefined
Begin typing your search above and press return to search.

கார்டூன் விவகாரம்: திருமாவளவனுக்கு ஆதரவாக துணை நிற்கும் இசுலாமிய இயக்கங்கள்!

கார்டூன் விவகாரம்: திருமாவளவனுக்கு ஆதரவாக துணை நிற்கும் இசுலாமிய இயக்கங்கள்!

Arjunan IlayarajaBy : Arjunan Ilayaraja

  |  18 May 2020 3:34 AM GMT

ஓவியர் வர்மா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் விதமாக கருத்து சித்திரம் வரைந்து வெளியிட்டார்.

ஓவியர் வர்மா தனது கருத்து சித்திரத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் காலை தொல் திருமாவளவன் நக்குவது போன்று வரைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தி.மு.க ஆதரவு ஓவியர் என்பதால் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறது அரசியல் வட்டாரங்கள்.


திருமாவுக்கு ஆதரவாக தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்களும் பெரிதாக கண்டித்ததாக தகவல் இல்லை. ஆனால், இசுலாமிய இயக்கங்கள் கடுமையான கண்டனத்தை திருமாவுக்கு ஆதரவாக பதிவு செய்து வருகின்றனர்.

ஓவியர் வர்மாவுக்கு எதிராக இசுலாமிய பெண் எழுத்தாளர் இசுலாமிய அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.




குடியுரிமை சட்டத்தை எதிர்த்த இசுலாமிய இயக்கங்கள் மற்றும் இசுலாமிய கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட திருமாவுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இசுலாமிய இயக்கங்கள் செயல்படுகின்றன. ஆனால், ஒன்றாக இணைந்து அரசியல் களம் கண்டு வெற்றிப்பெற்ற தி.மு.க கூட்டணி கட்சிகள் ஏன் திருமாவை மறந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.



Next Story