Top
undefined
Begin typing your search above and press return to search.

தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக பேசிய தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலின ஆணையம் அதிரடி நடவடிக்கை!

தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக பேசிய தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலின ஆணையம் அதிரடி நடவடிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 May 2020 4:51 PM GMT

தமிழக தலைமைச் செயலரை கடந்த மே 13-ஆம் தேதியன்று தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தயாநிதி மாறன், "தலைமை செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? தாழ்த்தப்பட்ட ஆட்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள். மற்ற சாதியினரை அப்படி நடத்தமாட்டார்கள் என்பது போல் தயாநிதி மாறனின் பேச்சு அமைந்துள்ளது. அவரது பேச்சு வருங்காலத்தில் ஆதிக்க சமூகத்தினர் இதுபோல பேசுவதற்கு வழி வகை செய்யும் என கண்டனக்குரல்கள் ஒலித்தன.

அவரது பேச்சு, பட்டியல் சமூக மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே தயாநிதி மாறன்,டி.ஆர்.பாலு ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய பட்டியலின ஆணையம் இன்று தமிழக தலைமை செயலாளர், தமிழக டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர் காவல் ஆணையர் ஆகியோருக்கு தயாநிதி மாறனின் பேச்சு குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஏழு நாட்களில் இது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை தெரியப்படுத்த வேண்டும் என கறார் காட்டியுள்ளது ஆணையம். இதனால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story