Top
undefined
Begin typing your search above and press return to search.

கோவில் கருவறைக்குள் புகுந்து பூசாரியை தாக்கிய தி.மு.க உடன்பிறப்பு - அட்டூழியங்களின் மையமாகி வரும் தி.மு.க?

கோவில் கருவறைக்குள் புகுந்து பூசாரியை தாக்கிய தி.மு.க உடன்பிறப்பு - அட்டூழியங்களின் மையமாகி வரும் தி.மு.க?

Mohan RajBy : Mohan Raj

  |  17 Oct 2020 7:45 AM GMT

கோவில் கருவறைக்குள் புகுந்து கோவில் பூசாரியை தாக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது தி.மு.க, ஏற்கனவே உணவகம், பொது இடம், மதுபான கடை என பொதுமக்களையும் ஏன் போலீசாரையும் கூட தாக்கி வந்த தி.மு.க'வினர் இப்பொழுது பரிணாம வளர்ச்சியாக கோவில் கருவறைக்குள் புகுந்து பூசாரியை தாக்கியுள்ளனர்.

இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அதில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் பூசாரி ஓம்பிரகாஷை, கருவறைக்குள் புகுந்து, தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பேபியின் கணவர் லெனின் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

தாக்கிய இவர் கண்ணனூர் கிராமத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த காசிராஜனின் மகன் கண்ணனூர் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பேபியின் கணவர் லெனின், அங்காள பரமேஸ்வரி கோயிலில் பூஜை செய்பவர் துறையூர் இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் ஓம் பிரகாஷ் என்பவரை கோவில் கருவறையில் வைத்து தாக்கியுள்ளார்.

ஏற்கனவே தி.மு.க'வினரின் அட்டூழியம் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்குவது, செல்போன் கேட்டு கடையை உடைப்பது, பியூட்டி பார்லருக்குள் சென்று பெண்களை உதைப்பது, நிலத்தை அபகரிப்பது, சிக்கனில் எலும்பு இல்லை என ஹோட்டல் சர்வருக்கு பளார் விடுவது என அத்தனை விதமான அட்டகாசங்களிலும் எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க'வினர் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை கண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story