Top
undefined
Begin typing your search above and press return to search.

ஓராண்டு நிறைவு: முரசொலி மூலப்பத்திரம் எங்கே? ராமதாஸ் ட்விட்.!

ஓராண்டு நிறைவு: முரசொலி மூலப்பத்திரம் எங்கே? ராமதாஸ் ட்விட்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2020 8:18 AM GMT

தி.மு.க.வின் முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருப்பது குறித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஆண்டு 17ம் தேதி ட்விட்டரில் கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதில் "பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல.. பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஹா.. அற்புதம்.. அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்" என பதிவிட்டிருந்தார். இந்த விசயம் தமிழகத்தில் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.கவும் "மூல பாத்திரம் எங்கே?" என்று கேட்டவண்ணம் இருந்தனர். இதற்கு இதுவரை தி.மு.க தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.


இந்நிலையில் ஒரு வருடம் கழித்து மீண்டும் அந்த டீவீட்டை தற்போது பாமகவினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Next Story