Top
undefined
Begin typing your search above and press return to search.

வேலூர் தேர்தலில் பிடிபட்ட பணத்தின் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ட்ரான்ஸ்பர்.!

வேலூர் தேர்தலில் பிடிபட்ட பணத்தின் மீது நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் ட்ரான்ஸ்பர்.!

Mohan RajBy : Mohan Raj

  |  17 Oct 2020 12:00 PM GMT

தி.மு.க'விற்கு பிடித்தமான விஷயங்கள் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், சட்ட விரோத செயல்கள் தான் இவைகளை செய்பவர்களைதான் கூடவே வைத்து அழகு பார்க்கும் மாறாக இவற்றை எல்லாம் செய்யாமல் எதிர்த்து நேர்மையாக செயல்பட்டால் அது அரசியல்வாதியாக இருந்தால் அவர்களின் மேல் கறையை பூச முயற்சிக்கும், அரசு அதிகாரிகளாக இருந்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை குறைந்தபட்சம் ட்ரான்ஸ்பர் செய்யும் அளவிற்காவது செல்லும்.

அந்த வகையில் இன்ஸ்பெக்டர் நிவாஸ் என்பவரை வேலுர் சட்டமன்ற தொகுதி தேர்தல் சமயத்தில் ரெய்டு நடத்தி பறிமுதல் செய்த பணத்தை சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முயன்ற காரணத்தினால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி திருவண்ணாமலைக்கு ட்ரான்ஸ்பர் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க'வின் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்.பியாக வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், வாக்காளர்களுக்கு கொடுக்க, பதுக்கி வைத்திருந்த, பல கோடி ரூபாய் பிடிபட்டது. இதனால் அங்கு தேர்தலையே நிறுத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இந்தியாவிலேயே பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை நிறுத்திய ஒரே தொகுதி வேலூர் என்றாகிவிட்டது. தி.மு.க'வால் தமிழகத்திற்கு அவப்பெயர் உண்டானது.

வேலூர் மக்களவைத் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தற்பொழுது கதிர் ஆனந்த் எம்.பி'யாகி விட்டார் ஆனால் கடந்த தேர்தலின் போது பிடிபட்ட பலகோடி பணம் தொடர்பாக தற்போது, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, இன்ஸ்பெக்டர் நிவாஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார். உடனே கடுப்பான தி.மு.க தரப்பு அழுத்தம் கொடுத்து அந்த அதிகாரியை திருவண்ணாமலை'க்கு ட்ரான்ஸ்பர் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. சட்டத்தையும் வளைத்து அதன் மூலம் தி.மு.க தன் கட்சியை வளர்த்து வருகிறது.

Next Story