Top
undefined
Begin typing your search above and press return to search.

முடிவுக்கு வரும் திராவிட கட்சிகளின் நீட் நாடகம் - அண்ணாமலை கணிப்பு சரியானது.!

முடிவுக்கு வரும் திராவிட கட்சிகளின் நீட் நாடகம் - அண்ணாமலை கணிப்பு சரியானது.!

Mohan RajBy : Mohan Raj

  |  17 Oct 2020 11:30 AM GMT

தமிழகத்தில் 'நீட்' தேர்வை வைத்து அரசியல் நாடகம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என தி.மு.க போன்ற கட்சிகள் தமிழக மாணவர்களால் நீட் எழுத முடியாது, இது தமிழக மாணவர்களுக்கு வேண்டாம், இதனால் தான் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என பிண அரசியல் செய்த தி.மு.க போன்ற திராவிட கட்சிகளின் 'நீட்' அத்தியாயம் முடிவுக்கு வரும் நிலை எட்டியுள்ளது.

மேலும் இதுபற்றி பா.ஜ.க துணைத்தலைவர் அண்ணாமலை நீட் தேர்வு முடிந்த அடுத்த நாளே கூறியது '"நீட்' தேர்வு பிறகு வரும் ரிசல்ட் பாருங்க, நம்முடைய மாணவர்கள் திறமையானவரகள், எந்த ஒரு தேர்வையும் எதிர்கொள்ள கூடியவர்கள்" என்று சரியாக கணித்தார்.

மேலும் இதுபற்றி நீட் தேர்வு முடிந்த மறுநாளே அண்ணாமலை கூறியது, "நீட் தேர்வு முடிவுகள் வரட்டும் வந்தபிறகு அதன் முடிவுகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் தமிழக மாணவர்களின் திறமையை, அதுமட்டுமில்லாமல் 2005 முதல் 2020 வரை கடந்த 5 ஆண்டுகால நீட் தேர்வு முடிகள் பற்றிய விவரங்களை எடுத்துகொள்ளுங்கள் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு முன்னேறியிருக்கிறது என தெரியும்.

நம் சிலபஸ்க்கு நீட் பொருந்தாது என்றார்கள் கிட்டதட்ட இந்த ஆண்டு 180 கேள்விகளில் 174 கேள்வி வரை மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. கொரோனோ காலகட்டத்திலும் அரசாங்கத்தின் சரியான நடவடிக்கை மூலம் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 84% சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர்" என கூறினார்.

மேலும், "தமிழ்நாட்டில் ஊடக பிம்பம் நீட் தேர்வு தவறு என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியதாகவும், அரசியல் கட்சிகள் அதனை மாணவர்களின் வாழ்க்கையாக பார்க்காமல் அரசியல் லாபமாக பால்த்ததினால் நீட் பற்றிய தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் "நீட் தேர்வு முடிவுகளுக்கு பிறகு நம் மாணவர்களின் திறமை தெரியவரும் என்றார் அவர் கூறியது போலவே நீட் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் சாதித்துள்ளனர். இன்று தேர்வு முடிவுகள் அண்ணாமலை அவர்கள் கூறியது போலவே வந்துள்ளது. தமிழக அரசுப்பள்ளி மாணவர் ஜீவித் குமார் இந்திய அளவில் அரசுப்பள்ளி மாணவர்கள் மத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளார், 720 மதிப்பெண்களுக்கு 624 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் தந்தை ஆடுமேய்க்கும் கூலித்தொழிலாளியின் மகன் என்பது குறிப்பிடதக்கது.

Next Story