Top
undefined
Begin typing your search above and press return to search.

பீகார்: வாக்கு சதவீதத்தை தொடர்ந்து அதிகரித்து அசத்தும் பா.ஜ.க.!

பீகார்: வாக்கு சதவீதத்தை தொடர்ந்து அதிகரித்து அசத்தும் பா.ஜ.க.!

JananiBy : Janani

  |  18 Oct 2020 2:30 AM GMT

பீகாரில் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.

ஒவ்வொரு முறையும் பீகாரில் நடைபெறுகின்றன சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து வருகின்றது என்று கணக்கிடப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2020 இந்த ஆண்டு பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க -JDU ஒரு அணியாகவும் காங்கிரஸ்-RJD- இடதுசாரி கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. மேலும் LJP இம்முறை தனியாக JDUவிற்கு எதிராக போட்டியிடுகின்றது.


பீகாரில் 2000, 2005, 2010 மற்றும் 2015 இல் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த நான்கு முறை நடைபெற்ற தேர்தல்களில் மொத்த கட்சிகள் போட்டியிட்டன. ஒவ்வொரு முறையும் பா.ஜ.க அதன் வாக்கு சதவீதத்தை அதிகரித்து வந்துள்ளது. 2005 இல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க 10.97 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. 2015 இல் 24.42 சதவீதமாக அதிகரித்தது. இது 157 சட்டசபை இடங்களில் போட்டியிட்டதே இந்த வாக்கு அதிகரிப்புக்குக் காரணமாக இருந்தது.

மேலும் 2015 தேர்தலில் பீகாரில் பகுஜன் சமாஜ் கட்சி 228 தொகுதிகளிலும், சி.பி.ஐ 98 மற்றும் காங்கிரஸ் 41, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் போட்டியிட்டது. மேலும் மாநிலக் கட்சிகளான JDU, RJD, LJP 2005 நடைபெற்ற தேர்தலில் LJP 203 இடங்களில் போட்டியிட்டு 11.10 சதவீதத்தைப் பெற்றது. RJD 175 இடங்களில் போட்டியிட்டு 23.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. JDU 20.46 சதவீத வாக்குகளைப் பெற்றது.

ஆனால் 2015 இல் நடைபெற்ற தேர்தலில் LJP 42 இடங்களில் போட்டியிட்டு 4.83 சதவீத வாக்குகளையே பெற்றது. RJD 101 இடங்களில் போட்டியிட்டு 18.35 சதவீதத்தைப் பெற்றது. 2015 இல் பா.ஜ.க வாக்கு 24.42 சதவீதமாக அதிகரித்தது. மேலும் 2005 இல் மாநிலக் கட்சிகள் மொத்தம் 57.39 சதவீதத்தைப் பெற்றது, இது 2015 தேர்தலில் 42.58 சதவீத வாக்குகளாகக் குறைந்துள்ளது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

Next Story