Top
undefined
Begin typing your search above and press return to search.

நக்சல் செயல்களை ஆதரிக்கிறாரா கனிமொழி? மத்திய புலனாய்வு அமைப்பை கண்டித்து கூட்டம்.!

நக்சல் செயல்களை ஆதரிக்கிறாரா கனிமொழி? மத்திய புலனாய்வு அமைப்பை கண்டித்து கூட்டம்.!

Mohan RajBy : Mohan Raj

  |  18 Oct 2020 6:30 AM GMT

தி.மு.க'வின் அரசியல் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரே பாணிதான் அது மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து இதனால் மக்களுக்கு ஆபத்து என கூச்சலிட்டு அதன் மூலம் ஆளும் அரசுகளின் மீது மக்களுக்கு வெறுப்பை வரவழைத்து அந்த வெறுப்பே தனக்கு சாதகமாக்கி தேர்தலில் அதனை வாக்குகளாக அறுவடை செய்வது தந்திரமாகும்.

இத்தனைக்கும் தமிழகத்தில் 5 முறை ஆட்சி பீடத்தில் அமர்ந்த கட்சி தன் சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க இயலாமல் ஆளும் அரசுகள் மீது வெறுப்பை வரவழைத்து அந்த வெறுப்பை தனக்கு சாதகமாக்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஊழல் செய்து தழைப்பதே தி.மு.க'வின் திட்டம்.

அந்த வகையில் சமீப காலமாக தி.மு.க ஆளும் அரசுகள் மீது வெறுப்பை வரவழைக்க செய்த ஆர்ப்பாட்டங்கள், கிளப்பிவிட்ட வதந்திகள், போலி போராளிகளை உருவாக்கி அதன் மூலம் பரப்பிய பொய்கள் அனைத்துமே தவிடுபொடியாகி மாறாக தி.மு.க'வின் மீதே மக்களுக்கு வெறுப்பை வரவழைத்துவிட்டது.

இதனை உணர்ந்து கொண்ட தி.மு.க தற்பொழுது சத்தமில்லாமல் மத வெறுப்பை ஆயுதமாக பயன்படுத்த துவங்கி விட்டது. அதாவது மத்தியில் ஆளும் மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என்ற ஒற்றை வரியை சிறுபான்மையினர் மனதில் பதிய வைத்து அதன் மூலம் சிறுபான்மையினரின் மத்திய அரசு மீது வரும் வெறுப்பை தி.மு.க'விற்கு சாதகமாக்கி வாக்குகளை அள்ள வேண்டும் என்பதே நோக்கம்.

இதற்கு சமீபத்தில் கனிமொழி ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் விதை போட்டிருக்கிறார். இரு தினங்கள் முன்பு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்ற கிறுஸ்துவ அமைப்பு சார்பில் சாந்தோம் பள்ளி அரங்கில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த ஆர்ப்பாட்டமானது ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்டேன் சுவாமி இந்திய புலனாய்வு அமைப்பு கைது செய்ததை கண்டிக்கும் ஆர்ப்பாட்டமாகும்.

இந்த கைது சம்பவத்தை அரசியலாக்கி மத்திய மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற எண்ணத்தை மக்களின் மனதில் விதைக்க உள்நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டமாகும்.

மத்திய புலனாய்வு அமைப்பு ஒருவரை கைது செய்கிறது என்றால் அவரின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஏன் வருடக்கணக்கில் கூட கண்காணிக்கப்பட்டு அவரின் நடவடிக்கைகள் நாட்டின் அமைதிக்கும் இறையாண்மை'க்கும் அச்சுருத்தலாக இருக்கும் பட்சத்தில் அவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பர். இப்படி நாட்டின் நலனை மையமாக வைத்து மத்திய புலனாய்வு அமைப்பு கைது நடவடிக்கை செய்த செயலை தன் பதவி வெறி லாபத்திற்காக தி.மு.க அரசியலாக்க பார்க்கிறது.

ஒருவேளை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களை செய்யும் அமைப்புகளுக்கும் தி.மு.க'விற்கும் என்ன தொடர்பு என்பதை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை அரசியல் விமர்சகர்கள் முன்னிருத்துகின்றனர். இப்படி கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கட்சியாக அமர்ந்த வறட்சியில் நாட்டின் பாதுகாப்பிற்கே பங்கம் விளைவிக்கும் அமைப்புகளை ஆதரிக்கும் செயலில் தி.மு.க ஈடுபடுவது தி.மு.க'விற்கு நல்லதல்ல என்ற கருத்தும் நிலவி வருகிறது.

Next Story