Top
undefined
Begin typing your search above and press return to search.

பொய் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச 8 பேர் கொண்ட குழு தீவிரம் - தி.மு.கவின் தேர்தல் தில்லாலங்கடி.!

பொய் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச 8 பேர் கொண்ட குழு தீவிரம் - தி.மு.கவின் தேர்தல் தில்லாலங்கடி.!

Mohan RajBy : Mohan Raj

  |  16 Oct 2020 11:30 AM GMT

தி.மு.க 2021 தேர்தல் அறிக்கையை தயாரிக்க 8 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்ந குழுவில் இடம் பெற்றுவர்கள் பரிசீலித்து வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வரைவு அறிக்கையை தயாரித்து தி.மு.க தலைமையிடத்திற்கு அனுப்பி வைப்பர், தி.மு.க தலைமை அதனை ஆராய்ந்து பின் இறுதி வடிவத்துடன் வெளியிடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனமும் உண்டு.

இந்த நிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் அதனை செயல்படுத்துவதில் தி.மு.க எந்தளவிற்கு மும்முரம் காண்பிக்கிறது அல்லது வாக்குகளை அறுவடை செய்ய மட்டும்தான் தேர்தல் அறிக்கையா என ஆராய்ந்து பார்த்த பொழுது கடந்த 2006'ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தி.மு.க அந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதிகளாக அளித்த விஷயங்களை எவ்வாறு நிறைவேற்றினர் என்பதை ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதில் முக்கிய சில விஷயங்களை எடுத்து ஆராய்ந்து பார்தததில் தி.மு.க தேர்தல் அறிக்கை வெறும் காகிதமே தவிர அது செயல்வடிவம் பெறவே பெறாது என நிரூபனம் ஆகியுள்ளது.

1) 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறையத பட்சம் 2 ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம் என தி.மு.க வாக்குறுதி அளித்தது. பின் ஆட்சிக்கு வந்த பிறகு அதையும் செய்யவில்லை!

2) புன்செய் நிலங்களையும், தரிசு நிலங்களையும் முறையான விளைச்சல் நிலங்களாக மாற்றிட நுண்ணிய நீர் பிரி முகடு மேலாண்மை போன்ற புதிய தொழில்நுட்பங்கள் கையாள்வதற்கு வழிவகை காண்போம் என்ற வாக்குறுதி 2006'ல் தி.மு.க'வின் தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டது அது நிறைவேற்றப்பட்டவில்லை மாறாக இதே வாக்குறுதியை 2016 தேர்தலிலும் அளித்தனர்.

3) வேளாண்மைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேசிய உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தமிழகத்தில் நிறுவப்படும் என்று 2006 தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி கடைசிவரை நிறைவேற்றப்படவே இல்லை இருப்பினும் அதே பொய்யான அறிக்கையை வாக்குறுதி என்ற பெயரில் 2016 தேர்தலிலும் தி.மு.க அளித்தது.

4) ஆற்றுப் படுகையில் 200 மீட்டர் தூரத்திற்கு மேல் தான் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு என்று 2005 ஆண்டு வரையில் வழங்கப்பட்டு வந்த நிலையில் . அது 100 மீட்டர் தூரம் என குறைக்கப்படும் என்ற வாக்குறுதி அள்ளி வீசியது தி.மு.க ஆனால் வழக்கம் போல் இதையெல்லாம் யார் கேட்க போகின்றனர் என்ற அலட்சியத்தில் காற்றில் பறக்க விட்டது.

இவ்வளவிற்கும் இது போல் பொய் வாக்குறுதிகளையும், பரப்புரைகளையும், ஆசை வார்த்தைகளையும் மக்கள் மனதில் குறிப்பாக அரசாங்கத்தை நம்பி வாழும் ஏழைகள் மனதில் விதைத்துவிட்டு அந்த ஆண்டில் 2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சி கட்டிலில் அமர்ந்து சுகபோகமாக இருந்தது. போதாக்குறைக்கு மத்திய அரசில் காங்கிரஸோடு கூட்டணியமைத்து பதவி வெறியில் ஆட்சி பீடத்தில் புரண்டது. ஆனால் தி.மு.க நினைத்திருப்பின் நிறைவேற்றியிருக்க முடியும் ஆனால் 2ஜி போன்ற ஊழலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களை மறந்துவிட்டு தற்பொழுது 8 பேர் கொண்ட குழுவை இன்னோர் பொய் அறிக்கை தயார் செய்ய ஏற்படுத்தியுள்ளது.

"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?"

Next Story