Top
undefined
Begin typing your search above and press return to search.

தொடரும் தி.மு.கவின் ஊழல் - 8 கோடி மதிப்புள்ள எம்.பி கவுதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்.!

தொடரும் தி.மு.கவின் ஊழல் - 8 கோடி மதிப்புள்ள எம்.பி கவுதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்.!

Mohan RajBy : Mohan Raj

  |  17 Oct 2020 2:30 AM GMT

ஊழல் என்றாலே தி.மு.க என்று வரலாற்றில் பெயர் பெற்றும் தி.மு.க மீது ஊழல் புகார்கள் குறையவில்லை, இன்று வரை அதன் தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் ஏதாவது ஊழல் புகாரில் சிக்கி அரசாங்க நடவடிக்கைகளால் தண்டனையோ அல்லது சொத்து பறிமுதல் நடவடிக்கையிலோ மாட்டி வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி தி.மு.க எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தி.மு.க'வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது மகன் கவுதம சிகாமணி. இவர் கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாயை மறைத்ததாகவும் தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் கவுதம சிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் மேலும், வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் உள்பட ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எம்.பி. கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தி.மு.க எம்.பி ஜகத்ரட்சகன் அவர்களின் சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியது குறிப்பிடதக்கது.

Next Story