Top
undefined
Begin typing your search above and press return to search.

வட்டி கேட்டு தி.மு.க. பிரமுகர் மிரட்டியதால் கூலி தொழிலாளி தற்கொலை முயற்சி.! #Dmk

வட்டி கேட்டு தி.மு.க. பிரமுகர் மிரட்டியதால் கூலி தொழிலாளி தற்கொலை முயற்சி.! #Dmk

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 12:30 PM GMT

கூலி தொழிலாளிக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அவரை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு மிரட்டியதால் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கலைமணிக்கு கவியரசு என்ற மகன் உள்ளார். இவர் சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இவரின் மருத்துவ படிப்பு செலவிற்கு கலைமணி திமுக பிரமுகரும், நிதி நிறுவன அதிபர் பூபதியிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார்.

அதிக வட்டி எனினும் மகனின் படிப்பு செலவு என்பதால் வாங்கினார், அதற்கு தகுந்த படி வட்டியும் சரியாக கட்டி வந்தார். கொரோனோ ஊரடங்கு சமயம் என்பதால் சரியான வருமானமின்றி இருந்து வந்த கூலி தொழிலாளி கலைமணியால் போன மாதம் சரியாக வட்டி செலுத்த இயலவில்லை இதனால் கோபமடைந்த திமுகவை சேர்ந்த பூபதி, கலைமணியை அனைவரின் முன்னிலையிலும் கேவலமாக திட்டியுள்ளார் இதனால் மனமுடைந்த கலைமணி விஷம் அருந்தினார்.

உடனே அவரை குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் கூலி தொழிலாளி தற்கொலை முயன்ற வழக்கில் திமுக பூபதி'யை போலிசார் கைது செய்தனர்.


Next Story