Top
undefined
Begin typing your search above and press return to search.

"பதவி மோகத்துக்காக நாட்டை குட்டிசுவராக்கிட்டு இப்ப வந்து நாடகம் போடுறீங்களா?" - சட்டமன்றத்தில் வெடித்த எடப்பாடி அமைதியாக அமர்ந்த ஸ்டாலின் #DMK #ADMK #EPS #MKStalin #TNAssembly

"பதவி மோகத்துக்காக நாட்டை குட்டிசுவராக்கிட்டு இப்ப வந்து நாடகம் போடுறீங்களா?" - சட்டமன்றத்தில் வெடித்த எடப்பாடி அமைதியாக அமர்ந்த ஸ்டாலின் #DMK #ADMK #EPS #MKStalin #TNAssembly

Mohan RajBy : Mohan Raj

  |  15 Sep 2020 11:00 AM GMT

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன அதில் முக்கியமானது நீட் தேர்வு சம்பந்தப்பட்ட விவாதம். அந்த விவாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரிடையே நீட் தேர்வு சம்மந்தமான விவாதம் முக்கியமானது.

நீட் விவாதம் தொடர்பாக கேள்வி நேரத்தில் பேசிய ஸ்டாலின் "மத்திய அரசு நீட் தேர்வை தமிழகத்தில் திணித்தபோது வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க, நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு ஆதரவளித்தது தி.மு.க. 3 வருடங்களாக மசோதாவிற்கு ஒப்புதல் பெறாமல் இருந்தது அ.தி.மு.க அரசு" என குற்றம் சாட்டினார். குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க'தான் முக்கிய காரணம் என குறிப்பிடும்படி இருந்தது அவரின் பேச்சு. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி வெடித்து தள்ளிவிட்டார். இது தொடர்பாக எடப்பாடி பேசியது, "நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்?" என ஆவேசமாக பேசினார், மேலும் பேசிய அவர், "2010'ல் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது தி.மு.க கூட்டணியில் இருந்ததா, இல்லையா?" என மிரட்டிய தோரணையில் கேட்க பதிலளிக்க சற்றே தயங்கினார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்.

மேலும் விடாமல் வெடித்த எடப்பாடி பழனிச்சாமி "தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு தி.மு.கதான் காரணம். கூட்டணியிலிருந்த தி.மு.க பதவி மோகத்திற்காக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது" என சற்று கோபமாகவே பேசினார். என்னடா இப்படி உண்மையை பேசிட்டாரே என உடன்பிறப்புகள் வழக்கம்போல் அமைதிகாத்தனர்.

Next Story