Top
undefined
Begin typing your search above and press return to search.

காலையில் எடப்பாடி சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டு, மாலை கட்சி கூட்டத்தில் சவால் விட்ட ஸ்டாலின் - விளம்பர மோகத்தின் உட்சத்தில் தி.மு.க தலைவர்? #DMK #MKStalin #EPS

காலையில் எடப்பாடி சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டு, மாலை கட்சி கூட்டத்தில் சவால் விட்ட ஸ்டாலின் - விளம்பர மோகத்தின் உட்சத்தில் தி.மு.க தலைவர்? #DMK #MKStalin #EPS

Mohan RajBy : Mohan Raj

  |  15 Sep 2020 3:00 PM GMT

அரசியலில் தன் கருத்தை அப்பொழுதே தெரிவிப்பவர் அரசியலில் ஆகச்சிறந்த அரசியல்வாதி, அதை ஆறப்போட்டு பிறகு வெளியில் வந்து கருத்தை தெரிவிப்பவர் தன் கருத்தை கேள்விக்கு ஏற்ப தயார் செய்து வருகிறார் என்று பொருள். அந்த வகையில் இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பகலில் சட்டசபையில் எடப்பாடி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். ஆனால் அந்த பதிலை சட்ட மன்றத்தில் அங்கேயே அளித்திருக்கலாம் ஆனால் அங்கே எடப்பாடி கேள்வி கேட்டவுடன் மவுனமாக எழுந்து வெளிநடப்பு செய்துவிட்டு மாலை கட்சி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

இன்று சட்டமன்றத்தில் எடப்பாடி அவர்கள் நீட் தேர்வு தொடர்பான கேள்வி நேர விவாதத்தில் தி.மு.க மீது வெடித்து தள்ளிவிட்டார். இது தொடர்பாக எடப்பாடி பேசியது, "நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்?" என ஆவேசமாக பேசினார், மேலும் பேசிய அவர், "2010'ல் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது தி.மு.க கூட்டணியில் இருந்ததா, இல்லையா?" என மிரட்டிய தோரணையில் கேட்க பதிலளிக்க சற்றே தயங்கினார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்.

மேலும் விடாமல் வெடித்த எடப்பாடி பழனிச்சாமி "தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு தி.மு.கதான் காரணம். கூட்டணியிலிருந்த தி.மு.க பதவி மோகத்திற்காக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது" என சற்று கோபமாகவே பேசினார். இதற்கு பதிலளிக்க இயலாமல் தி.மு.க'வை சேர்ந்த எம்.எல்.ஏ'க்கள் கட்சி தலைவர் ஸ்டாலினுடன் வெளிநடப்பு செய்தனர்.

இதனைதொடர்ந்து இன்று மாலை தி.மு.க சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா'வில் பேசிய ஸ்டாலின், "நீட் தேர்வில் நாங்கள் அரசியல் செய்யவில்லை மாறாக நாங்கள் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கேட்டு மத்திய அரசிற்கு ஒரு மசோதா'வை அனுப்பி வைத்தோம் ஆனால் அது நடைபெறவில்லை" என பதிலளித்தார். மேலும் பேசிய அவர் கிராமத்தில் ஒரு சொல்வழக்கமுண்டு அதில் "பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கத்த பசங்களா" என இவ்வாறு எடப்பாடி அரசு பொய் சொல்லி திரிகிறது எனவும், இனிமே ஆளும் அ.தி.மு.க அரசின் பாச்சா பலிக்காது எனவும் இனி 7 மாதத்தில் வருவது தி.மு.க ஆட்சிதான்" என வழக்கமான டெம்ப்ளேட்டில் தன் உரையை முடித்தார்.

அதாவது சட்டமன்றத்தில் இதே பதிலை நாகரீகமான முறையில் கூறியிருந்தால் அரசாங்க குறிப்புகளில் பதிவாகியிருக்கும். ஆனால் அங்கே உம்'மென இருந்துவிட்டு மாலை தன் கட்சி கூட்டத்தில் வந்து எடப்பாடி'க்கு சவால் விடுவதெல்லாம் இவர் சீரியஸாக செய்கிறாரா அல்லது குழம்பி செய்கிறாரா என உடன்பிறப்புகளே கேட்கும் அளவிற்கு உள்ளது.

Next Story