Top
undefined
Begin typing your search above and press return to search.

துரைமுருகனின் பா.ஜ.க பயம் - பா.ஜ.க மேலுள்ள கடுப்பில் அ.தி.மு.க'வே தேவலாம் என்ற நிலைக்கு வந்த துரைமுருகன் #Duraimurugan #DMK #TNBJP

துரைமுருகனின் பா.ஜ.க பயம் - பா.ஜ.க மேலுள்ள கடுப்பில் அ.தி.மு.க

Mohan RajBy : Mohan Raj

  |  15 Sep 2020 10:30 AM GMT

தமிழக வரலாற்றில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்துக்கு பிறகு தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே ஆண்டு வந்தன அது இன்று வரையிலும் தொடர்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க'வின் பிம்பம் தமிழகத்தில் விழ துவங்கியிருக்கிறது. அதன் வேர்கள் இங்கே தமிழக மண்ணிலும் பரவ துவங்கிவிட்டன இதன் தாக்கம் தற்போதைய தமிழக அரசியலில் தெரிய துவங்கி உள்ளது. திராவிட சாயம் பூசிய கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக தி.மு.க தலைவர்கள் மற்றும் அவர்களின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் மக்கள் மத்தியில் சாயம் வெளுக்க ஆரமித்துள்ளது. அவர்களின் கபட அரசியல் நாடகமும், கல்யாண வீடாக இருந்தாலும் சரி சாவு வீடாக இருந்தாலும் சரி தன் கட்சியின் இமேஜ் மற்றும் தன் கட்சி தலைவனின் பதவி ஆசை'க்கு தூபம் போடும் வகையில் அந்த இடத்தை எங்கே சிறு இடைவெளிய கிடைக்கிறதோ அங்கே தனது அரசியல் திரிப்பை திணித்து மக்களின் மத்தியில் ஆளும் அரசின் மீது வெறுப்பை விதைத்து அதன் மூலம் லாபம் காண நினைக்கும் போக்கை தி.மு.க தலைமையும் அதன் மற்ற தலைவர்களும் கையில் எடுத்துள்ளனர் இதன் உண்மை தன்மையை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழக பா.ஜ.க முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே தமிழ்நாட்டில் தி.மு.க'விற்கு மாற்று பா.ஜ.க என்ற நிலை உருவாகி வருகிறது. இதை தி.மு.க'வினர் வெளியில் காட்டிக்கொள்றாவிட்டாலும் உள்ளூர அவர்களின் என்ன ஓட்டம் தமிழக பா.ஜ.க'வின் வளர்ச்சி பற்றிய பயமே உள்ளது அது பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேச்சில் இன்று தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.

இது தொடர்பாக ஒரு கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் கூறியதாவது. "தி.மு.கவுக்கு போட்டி பா.ஜ.க தான் என்று சொல்கிறார்கள்" என்ற கேள்விக்கு "அது அவர்கள் கருத்து என்றும் எங்களுக்கு போட்டி அ.தி.மு.க தான்" என்று பதிலளித்துள்ளார். அதாவது எதிர்கட்சியில் வரிசையில் உள்ள ஒரு கட்சி அதுவும் 10 ஆண்டுகளாக பதவிக்கு காத்திருக்கு கட்சிக்கு அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளுமே எதிர்கட்சிகள்தான். வாக்குகளை பிரிப்பது, கூட்டணி மாறுவது, போராட்டங்களில் ஈடுபடுவது என அனைத்து செயல்களுமே கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் பதிவி'க்கு காத்துகொண்டிருக்கும் தி.மு.க'வின் வாக்குகளை பாதிக்கும் என்றும் அந்த வாக்குகள் கட்சியின் முதல்வர் ஆசைக்கே வெடி வைக்கும் என அரசியல் தெரியாதவர் அல்ல துரைமுருகன். எம்.ஜி.ஆர் இறக்கும் வரையில் கருணாநிதி'யை முதல்வர் நாற்காலி பக்கமே மக்கள் நெருங்க விடாததை கருணாநிதி அருகில் இருந்து பார்த்தவருக்கு தெரியாதா?இருப்பினும் தான் முக்கிய எதிரியாக நினைக்கும் ஒருவரை 'எங்கள் எதிரியல்ல' என கூறும் போக்கு தன் பயத்தை மறைக்கும் போக்காகும். இதையே கட்சியின் மூத்தவர் துரைமுருகன் செய்கிறார். இடி, மின்னல், மழை என தி.மு.க'வை வளர்த்தவருக்கு தெரியாதா இப்பொழுது இடி,மின்னல்,மழை எங்கே அடிக்கிறது அது யாருக்கு சாதகமாக அடிக்கிறது என தெரியாதா?

Next Story