Top
undefined
Begin typing your search above and press return to search.

நீட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் அசிங்கப்பட்ட ஸ்டாலின் அதை மடைமாற்ற டி-ஷர்ட் அணிந்து விளம்பரம் - பதவிமோகத்தில் விளம்பரத்தின் மொத்த உருவமாக மாறிய ஸ்டாலின் #MKStalin #DMK

நீட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் அசிங்கப்பட்ட ஸ்டாலின் அதை மடைமாற்ற டி-ஷர்ட் அணிந்து விளம்பரம் - பதவிமோகத்தில் விளம்பரத்தின் மொத்த உருவமாக மாறிய ஸ்டாலின் #MKStalin #DMK

Mohan RajBy : Mohan Raj

  |  16 Sep 2020 7:45 AM GMT

கட்சிகளின் போராட்டம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது ஆனால் தான் பட்ட அசிங்கத்தை மறைக்கவே கட்சிகளின் போராட்டம் பயன்படுகிறதென்றால் அது போராட்டமல்ல விளம்பரம். அந்த வகையில் விளம்பரப்பிரியரான தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று ஒரு புது விளம்பரபடம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் "தமிழ் எங்கள் உயிர்" என்ற வாசகத்துடன் தமிழ் மாநில வரைபடமும் அந்த வரைபடத்தின் நடுவில் கருணாநிதி, அண்ணாதுரை, ஈ.வே.ராமசாமி போன்றோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த படத்தை காலை வேளையில் அவர் சைக்கிள் பயணம் செய்யும் பொழுது எடுத்த மாதிரி உதயநிதி'யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

பின்புலத்தை விசாரித்ததில், கடந்த வாரம் முதல் நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் அரசியல் செய்து அதில் மாணவர்களின் தற்கொலையை நியாயப்படுத்தும் விதமாக கருத்துக்களை மக்களிடத்தில் விதைத்து அதனால் வரும் அனுதாப அலையை தி.மு.க அறுவடை செய்ய திட்டமிட்டு பரப்பப்பட்ட போராட்டத்தின் சுவடுகளை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓரிரு நிமிடங்களில் தவிடுபொடி ஆக்கிவிட்டார். அது தொடர்பான கேள்வி நேரத்தில் பேசிய எடப்பாடியார் தி.மு.க மீது வெடித்து தள்ளிவிட்டார், "நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள்?" என ஆவேசமாக பேசினார், மேலும் பேசிய அவர், "2010'ல் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க இருந்தபோது நீட் தேர்வுக்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தபோது தி.மு.க கூட்டணியில் இருந்ததா, இல்லையா?" என தி.மு.க'வின் பித்தலாட்டத்தை கடுமையாகவே விமர்சித்தார்.

மேலும் விடாமல் வெடித்த எடப்பாடி பழனிச்சாமி "தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 13 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு தி.மு.கதான் காரணம். கூட்டணியிலிருந்த தி.மு.க பதவி மோகத்திற்காக நாட்டை குட்டிச்சுவராக்கி உள்ளது" என சற்று கோபமாகவே பேசினார்.

இதனை சற்றும் எதிர்பாரத ஸ்டாலின் சட்டசபையில் இருந்து தன் எம.எல்.ஏ'க்களுடன் வெளிநடப்பு செய்தார். ஆனால் கடந்த வரு வாரமாக தமிழக அரசியலில் நீட் விவாகரத்தில் உழன்று பொரண்டு செய்த அரசியல் எல்லாம் ஒரே நாளில் சட்டமன்றத்தில் எடப்பாடி காலி செய்துவிட்டாரே என்ற ஆதங்கத்தில் மாலை தி.மு.க சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய அவர், "நீட் தேர்வில் நாங்கள் அரசியல் செய்யவில்லை மாறாக நாங்கள் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கேட்டு மத்திய அரசிற்கு ஒரு மசோதா'வை அனுப்பி வைத்தோம் ஆனால் அது நடைபெறவில்லை" என பதிலளித்தார்

இருப்பினும் மக்கள் மத்தியில் நீட் தொடர்பான அரசியலில் தி.மு.க சாயம் வெளுத்து விட்டது தனது 2021 முதல்வர் கனவிற்கு ஆபத்து என உணர்ந்த ஸ்டாலின் தரப்பு அதை மடைமாற்ற ஒரு புது நாடகத்தை அரங்கேற்ற யோசனை செய்தது. இருப்பினும் தி.மு.க'வின் அத்தனை நாடகங்களும் பொய்த்துப்போன நிலையில் அதன் அரதப்பழசான மொழியை மீண்டும் கையில் எடுக்கும் விதமாகவும் அதன் தொடர்ச்சியாகவும்தான் இன்று ஸ்டாலின் 'தமிழ் எங்கள் உயிர்' என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வெளியிட்ட விளம்பரம். அதனில் கொடுமை என்னவென்றால் 'தமிழ் எங்கள் உயிர்' என்பதையே "தமிழ் 'ENGAL UYIR' என ஆங்கிலம் கலந்த தமிழில் அச்சடித்து அணிந்திருந்தார். முத்தமிழறிஞர் என கூறம்படும் கருணாநிதி மகன் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் தமிழை வளர்ப்பது தமிழுக்கு சோதனையா அல்ல தமிழர்களுக்கு சோதனையா?

Next Story