Top
undefined
Begin typing your search above and press return to search.

தொலைக்காட்சிகளில் பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் Tit for Tat பாணியில் திருப்பி அடியுங்கள் - பா.ஜ.க-வினருக்கு H ராஜா கட்டளை!

தொலைக்காட்சிகளில் பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் Tit for Tat பாணியில் திருப்பி அடியுங்கள் - பா.ஜ.க-வினருக்கு H ராஜா கட்டளை!

R SubbaiahBy : R Subbaiah

  |  19 May 2020 2:39 PM GMT

பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அதே பாணியில் அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா இன்று டுவிட் செய்துள்ளது அனைத்து ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை மோசமாக, மிகவும் அவதூறாக விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க-வின் கரு. நாகராஜன் அதே பாணியில் கண்டிப்புடன் தாக்கி பேசினார். அவருடைய முந்தைய கூடாத செயல்பாடு ஒன்றை சுட்டிக் காட்டினார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் பெண்கள் பங்கேற்பது இல்லை என்றெல்லாம் இடதுசாரி பேச்சாளர்கள் விவாதங்களை கிளப்பினர்.

இந்த நிலையில் "பாரதப் பிரதமரை கல்லால் அடிப்பேன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது ஏற்புடையதா?" என்று பா.ஜ.க-வினரும் கேட்டு சமூக ஊடகங்களில் தகுந்த நெத்தியடி பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் எச் ராஜா, 'கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவதை மட்டும்ரசிக்க மாட்டார்கள். கோட்டைத் தாண்டி எகிறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும்', என்று ட்விட் செய்துள்ளார்.

Next Story