Top
undefined
Begin typing your search above and press return to search.

"2G பயத்தில் கனிமொழி உளறுகிறார்"- அண்ணாமலையின் நேரடிப் பேச்சால் அதிர்ந்து போன தி.முகவினர்.!

2G பயத்தில் கனிமொழி உளறுகிறார்- அண்ணாமலையின் நேரடிப் பேச்சால் அதிர்ந்து போன தி.முகவினர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Oct 2020 1:45 AM GMT

தி.மு.க எம்.பி கனிமொழி மீது 2G வழக்கு விசாரணை வேகம் எடுப்பதால் அவர் பயத்தில் உளறுகிறார் என்று தமிழக பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறையில் நேற்று வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை மத்திய அரசு எப்பொழுதும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் திட்டங்களையே கொண்டு வருவதாகவும் அதையக்ஷ மாநிலத்தில் இருக்கும் அதிமுக அரசும் ஆதரித்தே வருவதாகவும் தெரிவித்தார். பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க எதையும் ஆராய்ந்து பார்க்காமல் போராட்டம் நடத்துவது முட்டாள்தனமாகவே இருக்கின்றது என்றும் இதுவே தி.மு.கவுக்கு வழக்கமாகப் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்தார். அதே போல் 2ஜி வழக்கில் நாடாளுமன்ற எம்.பி கனிமொழி சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்காக மத்திய அரசு விசாரணை அமைப்புகளுக்கு எந்த வித அழுத்தமும் தரவில்லை என்றும் ஆனால் அவர் 2ஜி வழக்கு விசாரணை வேகம் எடுப்பதாலேயே பயத்தில் உளறுகிறார் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு தி.மு.கவை நேரடியாக கட்சியின் பெயரைச் சொல்லி அண்ணாமலை விமர்சித்தது தி.மு.கவினர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே "நேற்று அரசியலுக்கு வந்தவர் எல்லாம் தி.மு.கவை விமர்சிப்பது காமெடியா இருக்கு" என்று ஒரு பக்கம் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை தாங்கள் சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது போல் ஒரு பக்கம் பேசினாலும் "ஆதாயத்துக்காக அரசியலுக்கு வருபவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்" என்றும் ஒருபக்கம் கொந்தளித்து வருகின்றனர். திடீரென அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் திராவிட கட்சிகளை இப்படி குறை சொல்லக் கூடாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் கனிமொழி 2G வழக்கு பயத்தில் உளறுகிறார் என்று கூறியதும் தி.மு.கவினரை ஆத்திரப்படுத்தி உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது அதுபற்றி எதுவும் பேசக்கூடாது என்றும் "உளறுகிறார்" என்று மேம்போக்காக பேசக்கூடாது என்றும் கூறி வருகின்றனர். இதற்கு பதிலடியாக கல்வி விஷயத்தில் கூட அரசியல் செய்பவர்களை வேறு எப்படி விமர்சிப்பது என்று பா.ஜ.கவினரும் அண்ணாமலையின் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

https://kathir.news/politics/2g--20579

Next Story