2ஜி திருடர்களே.. ஊழல் பெருச்சாளிகளே.. சிசிடிவியே.. மூலப்பத்திரமே.. இன்னும் நிறைய.. இது நாகப்பட்டின பாஜகவினர்.!
2ஜி திருடர்களே.. ஊழல் பெருச்சாளிகளே.. சிசிடிவியே.. மூலப்பத்திரமே.. இன்னும் நிறைய.. இது நாகப்பட்டின பாஜகவினர்.!
By : Kathir Webdesk
தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியை சுவர் விளம்பரங்களில் தவறாக விமர்சனம் செய்து வந்தது. இதற்கு பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இதற்கு தக்க பதிலடி கொடுத்தார்.
கரூரில் எங்கெல்லாம் பாரத பிரதமர் மோடியை பற்றி சுவர்களில் தவறாக எழுதிய வாக்கியங்களை அழிக்க வேண்டும். அப்படி அழிக்கவில்லை என்றால் நாங்களும், சுடலையார் மற்றும் ஐந்து கட்சி அமாவாசை என்று எழுதுவோம் என்று கூறினார்.
இதனையடுத்து முதன் முறையாக நேற்று முதல் சுவர்களில் பிரதமர் பற்றிய வாசகங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அதிரடியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதமர் மோடியை பற்றி தவறாக விமர்சனம் செய்யப்பட்ட வாக்கியங்களை திமுகவினர் அழிக்கவில்லை.
இதனையடுத்து பாஜகவினர் அதே சுவர்களில் 2ஜி திருடர்களே, ஊழல் பெருச்சாளிகளே, ரூ.200, சிசிடிவே, மூலப்பத்திரமே, கோ பேக் ஸ்டாலின் என்று திமுகவிற்கு தக்க பதிலடி கொடுத்து வரைந்துள்ளனர்.
ஒரு பாரத பிரதமர் என்று பாராமல் திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை தற்போது பாஜகவினர் அவர்களின் ஆயுதங்களை அவர்களுக்கு எதிராகவே எடுத்துள்ளனர். இனியாவது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேர்மையான முறையில் அரசியல் செய்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை. இல்லை என்றால் அவர்கள் பாணியிலேயே பதிலடி தரப்படும் என்று பாஜகவினரும் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.