திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தில் இறங்கி ஆடும் பா.ஜ.க - தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் கொடி ஒளி திட்டம் தொடக்கம்
திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தில் இறங்கி ஆடும் பா.ஜ.க - தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் கொடி ஒளி திட்டம் தொடக்கம்
By : Kathir Webdesk
தமிழகத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க'விற்கு இணையாக வளர்ந்து வருகிறது பா.ஜ.க, திராவிட கட்சிகளின் இன்றைய வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கையில் தேசிய கட்சியான பா.ஜ.க'வின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அந்த வகையில் அடுத்த அதிரடியை தமிழக பா.ஜ.க முன்னெடுத்துள்ளது. அது உலக அரங்கில் முதல் முறையாக தமிழகமெங்கும் சுமார் 70 ஆயிரம் பாஜக கொடி ஒளி திட்டம் செயல்படுத்துதல் ஆகும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய 70வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்கள் கலந்து கொள்ளும் முப்பெரும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழா மாநில அறிவுசார் பிரிவு தலைவர் திரு அர்ஜுன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.. அதில் 700 பேருக்கு மோடி அவர்களின் மக்கள் நல உதவி திட்டங்களை தொடங்கி வைத்தல், மேலும் உலக அரங்கில் முதல் முறையாக தமிழகமெங்கும் சுமார் 70 ஆயிரம் பா.ஜ.க கொடி ஒளி திட்டம் துவக்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் சிறப்பம்சமாக பாஜக கொடிக்கம்பத்தில் சோலார் மின்விளக்கு திட்டம் அமைய திட்டம் துவங்கப்பட்டது. இது தமிழகத்தில் முதன்முறை ஆகும்.
இதனை தொடர்ந்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தனிமனித திறனை மேம்படுத்துதல், ஊக்குவித்தல், வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவது என்ற முயற்சியின் தொடர்ச்சியாக" வாழ்வாதார அடை காப்பகம்" என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. பா.ஜ.க அறிவுசார் பிரிவு நடத்தும்போது இந்த மாபெரும் முப்பெரு விழாவில் தமிழக பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் தாமரை மலர துவங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.