சமூக வலைதளத்தில் தான் நீ புலியா? தருமரியில் திமுக எம்.பி.யை இறங்கி அடித்த அண்ணாமலை.!
சமூக வலைதளத்தில் தான் நீ புலியா? தருமரியில் திமுக எம்.பி.யை இறங்கி அடித்த அண்ணாமலை.!
By : Kathir Webdesk
கரூர் மாவட்டத்தில் வேல்யாத்திரை நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை அம்மாவட்ட பாஜகவினர் ஏற்பாடுகளை செய்து வந்திருந்தனர். அப்போது கோ பேக் மோடி என்று சுவர் விளம்பரங்களை செய்திருந்தனர்.
இது பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசம் அடைந்த அண்ணாமலை, கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ‘’எங்கள் மோடிக்கு மரியாதை கொடுக்காதவர்கள் கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது’’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஒரு வாரம் நேரம் தருகிறேன். அதற்குள் சுவர் விளம்பரங்களை அழிக்காவிட்டால், அடிக்கடி கட்சி மாறும் செந்தில்பாலாஜியை ‘ஐந்துகட்சி அமாவாசை’, என்றும், வலைத்தளங்களில் ஸ்டாலினை சுடலை என்று சொல்லுவதால் ‘சுடலை ராஜா’ என்றும் நாங்கள் சுவரில் எழுதுவோம் என்றும் எச்சரிக்கையாக தெரிவித்தார். இதனையடுத்து பல இடங்களில் அது போன்ற சுவர்கள் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
இந்நிலையில், தருமபுரியில் நடைபெறும் வேல்யாத்திரையை முன்னிட்டு அம்மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தருமபுரியில் எழுதப்பட்ட கோ பேக் மோடி என்ற சுவர் விளம்பரங்களை பார்த்து மிகவும் ஆவேசம் அடைந்தார். இதனால் அவர் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமாரை கடுமையாக விமர்சித்தார்.
என்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று எம்.பி.செந்தில்குமாரை பார்த்து கேட்டேன். அவர் வரவில்லை, அதற்கு மாறாக ட்விட்டர், பேஸ்புக்கில்தான் நீ
புலியா?’’என்று கேள்வி எழுப்பினார். மேலும், கோபாலபுரத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காகத்தான் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியிருகிறார். முதல்வர் கனவிலும் மிதந்து வருகிறார் என்று ஸ்டாலினை கடுமையாக சாடினார்.
தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இதுவரை மக்களுக்கு செய்த திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? மக்களிடம் பிச்சை எடுத்துதானே போன முறை ஓட்டு வாங்கி ஜெயிச்சீங்க என்றும் விமர்சனம் செய்தார். அண்ணமாலையின் பேச்சுக்கு பாஜக தொண்டர்களிடையே மிகப்பெரிய கைத்தட்டல்களை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.