பந்த் எங்களுக்கு இல்லிங்க.. சாதாரண குடிமக்களுக்குதான்.. திமுகவினரின் மது ஆலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனம்.!
பந்த் எங்களுக்கு இல்லிங்க.. சாதாரண குடிமக்களுக்குதான்.. திமுகவினரின் மது ஆலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனம்.!
By : Kathir Webdesk
வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போரட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். முழு அடைப்பு போராட்டம் இன்றி தமிழகத்தில் வழக்கம் போல அனைத்தும் இயங்கியது. கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து மற்றும் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியினர் கடைகளை அடைக்க வலியுறுத்தினர். ஆனால் அவர்களின் தொழிற்சாலைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதுலாம் சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமே ஒழிய திமுகவினருக்கு விவசாயிகள் மீது அக்கறை எதும் இல்லை என்றே இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், திமுகவினர் நடத்தும் கோல்டன் வாட்ஸ் மதுஆலைக்கு ஆட்களை வழக்கம் போல் ஏற்றிச்சென்றனர். அவர்கள் ஏன் தொழிற்சாலைக்கு விடுமுறை விட்டிருக்கலாமே, விவசாயிகளுக்காக ஒரு நாள் தொழிற்சாலையை அடைத்தால் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனியாவது பொதுமக்களே திருந்துங்கள். இது போன்ற போலியான கட்சியினர் சொல்கின்ற கருத்துகள் அனைத்தும் மக்களை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.