2 லட்சம் பஞ்சமி நிலத்தை பற்றி பேசுவதற்கு முன்.. அண்ணா அறிவாலயத்தை வாங்குங்கள்.. கூட்டணியை விட்டுக்கொடுக்காத திருமா.!
2 லட்சம் பஞ்சமி நிலத்தை பற்றி பேசுவதற்கு முன்.. அண்ணா அறிவாலயத்தை வாங்குங்கள்.. கூட்டணியை விட்டுக்கொடுக்காத திருமா.!
By : Kathir Webdesk
அதிமுக கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், காட்டப்படும் ஓரவஞ்சனையையும் தலித் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பஞ்சமி நிலம் இரண்டரை இலட்சம் ஏக்கர் கண்டறியப்பட்ட பிறகும்கூட அதனை உரியவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் முதல் அண்ணா அறிவாலயத்தை மீட்டு வருவாரா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். பஞ்சமி நிலத்தில் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. இதனை அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி பஞ்சமி நிலத்தை அபகரித்துள்ளார் என்று பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் திருமாவளவன் பஞ்சமி நிலம் கண் முன்னே இருப்பதை கேட்டகாமல் எங்கேயோ உள்ளதை கேட்டு வருகிறார். இதன் மூலம் என்ன தெரிகிறது தனது கூட்டணியில் உள்ளவர்கள் பஞ்சமி நிலத்தை அபகரித்தாலும் அதனை கண்டும் காணாத மாதிரி இருந்திடனும்தான் அவரது பேச்சு அமைந்துள்ளது.
எப்போது அண்ணா அறிவாலயத்தை மீட்டு வருவார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.