போலி விளம்பர மோகத்தில் தி.மு.க - மக்களை ஏமாற்ற தினுசு தினுசாக விளம்பரம்.!
போலி விளம்பர மோகத்தில் தி.மு.க - மக்களை ஏமாற்ற தினுசு தினுசாக விளம்பரம்.!
By : Kathir Webdesk
சமூக வலைதளம் மற்றும் இணைய வசதி என்று ஒன்று இல்லாவிட்டால் தமிழ்நாட்டை தி.மு.கதான் கண்டுபிடித்தது எனவும், கருணாநிதிதான் சென்னையை உருவாக்கியவர் என்றும், ஸ்டாலின்தான் சென்னை மாநகராட்சியாக மாற காரணமே என்றும் தி.மு.கவினர் மக்கள் மத்தியில் புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டிருப்பார்கள். அந்தளவிற்கு தி.மு.க என்றாலே பொய் மூட்டை, பொய் மூட்டை என்றாலே தி.மு.க என்றாகிவிட்டது.
நாளுக்கு நாள் தி.மு.க உடன்பிறப்புகள் கட்சியின் சாதனைகள் என வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி திரிகின்றனர். இவ்வளவு ஏன் அவர்கள் எந்த ஆண்டு ஆட்சியில் இருந்தனர் என்றே வரலாறு தெரியாத மூடர்களாக தி.மு.க உடன்பிறப்புகள் நகைப்புக்கு உரியது. ஆனால் இவர்களை நம்பிதான் தி.மு.கவை யாரும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது என நேற்று ஸ்டாலின் சவால் விட்டார் என்று நினைத்தால் ஸ்டாலினின் நிலைமையை பார்த்து பரிதாபமாக உள்ளது.
இந்த வகையில் தி.மு.கவின் உடன்பிறப்பு ஒருவர் தி.மு.க எந்த ஆண்டு ஆட்சியிப் இருந்தது என்று கூட தெரியாத அளவிற்கு கட்சி விளம்பரம் செய்திருப்பது உடன்பிறப்புகளை பார்த்து சிரிப்பதா? பாவம் என்று நினைப்பதா என தெரியவில்லை
தி.மு.கவின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் என்கிற உடன்பிறப்பு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் தி.மு.கவின் சாதனையாக "நெடுஞ்சாலை துறைக்கு என தனி அமைச்சகத்தை 1992ம் ஆண்டு மார்ச் 26-ம் நாள் தி.மு.க உருவாக்கியது" என போலி விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
இதில் என்னவென்றால் 1992ம் தி.மு.க ஆட்சியிலேயே இல்லை, அந்த தேதியில் மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அ.தி.மு.க ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருந்தது. இப்படி வரலாற்றை திரித்து போலியாக தி.மு.க சாதித்தது போல் பிம்பத்தை ஏற்படுத்த உடன்பிறப்புகள் நினைப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இருப்பினும் இவர்களின் போலி விளம்பர மோகம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமும் தெளிவாக தெரிகிறது.