Kathir News
Begin typing your search above and press return to search.

சர்காரியா கமிஷன் வழக்கை வாபஸ் வாங்க கட்சத்தீவை கூலியாக கொடுத்தார் கருணாநிதி - கூறியது யார் ?

சர்காரியா கமிஷன் வழக்கை வாபஸ் வாங்க கட்சத்தீவை கூலியாக கொடுத்தார் கருணாநிதி - கூறியது யார் ?

சர்காரியா கமிஷன் வழக்கை வாபஸ் வாங்க கட்சத்தீவை கூலியாக கொடுத்தார் கருணாநிதி - கூறியது யார் ?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Oct 2020 7:26 PM IST

தி.மு.க இன்று என்னதான் நல்லவர்கள் வேடம் போட்டு அறிக்கைகள் வெளியிட்டாலும் அதனை உடனடியாக தோலுரித்து காட்டுவதில் அ.தி.மு.க தனித்தன்மை வாய்ந்தது, அந்த வகையில் அ.தி.மு.க'வின் அமைச்சர் கடம்பூர் ராஜூ "சர்காரியா கமிஷனில் தப்பிக்க கூலியாக கட்சத்தீவை கருணாநிதி தாரை வார்த்தார்" என தி.மு.க'வின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் மற்றும் கடம்பூர் தொகுதிகளில் அ.தி.மு.க'வின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திரைப் படப் பிரச்சினையில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. தமிழக மக்களை அவர்கள் இனியும் ஏமாற்ற முடியாது" என்றார்.


மேலும் பேசிய அவர், "இது மட்டுமல்லாது பல விஷயங்களிலும் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் ஹிந்தியில் பேசுவதை பெருமையாக பேசியவர் கருணாநிதி. மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்பள்ளிகளில் இடம்பெற தி.மு.க எம்பிக்கள் டோக்கன் பெறுகின்றனர்.

உண்மையாகவே இவர்கள் இந்தியை எதிர்த்தால் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பெற்ற இடங்களை திரும்ப ஒப்படைத்து இருந்தால் திமுகவின் தமிழுணர்வை பாராட்டலாம். அதிலும் இரட்டை வேடம், தி.மு.க'வினர் நடத்தும் பள்ளிகளிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார். மேலும் நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு, காவிரி நீர் பிரச்சனை, நெய்வேலி என்.எல்.சி பங்கு விற்பனை என பலவற்றிலும் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது" என தி.மு.க'வை சராமரியாக விளாசினார்.


மேலும், "தமிழர்களின் உரிமைகள் லட்சியங்கள் அனைத்தையும் காவு கொடுத்தது தி.மு.க ஆட்சிதான். சர்க்காரியா கமிஷன் வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காகவே கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்தார். ஆகவே எந்த பிரச்சனையிலும் தி.மு.க இரட்டைவேடம் போடும் என்பது நாட்டு மக்களுக்கு தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தமிழர்களை காக்கின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க மட்டுமே, இனியும் தி.மு.க'வின் இரட்டை வேடத்தை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். மக்களை தி.மு.க ஏமாற்றவும் முடியாது" என்று தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News