Kathir News
Begin typing your search above and press return to search.

ஏழை ஹிந்து தலித்துகளை ஏமாற்ற வீட்டில் சனாதனம்: திமுக, சிறுபான்மையினரை ஐஸ் வைக்க ஹிந்து வெறுப்பு.!

ஏழை ஹிந்து தலித்துகளை ஏமாற்ற வீட்டில் சனாதனம்: திமுக, சிறுபான்மையினரை ஐஸ் வைக்க ஹிந்து வெறுப்பு.!

ஏழை ஹிந்து தலித்துகளை ஏமாற்ற வீட்டில் சனாதனம்: திமுக, சிறுபான்மையினரை ஐஸ் வைக்க ஹிந்து வெறுப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Oct 2020 6:19 PM GMT

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாளுக்கு நாள் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருவதாகவும், சமீபத்தில் அவர் ஹிந்து மதத்தை காரணமாகக் கூறி ஹிந்து பெண்கள் அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் குறிப்பிட்டுள்ளதாகவும் பாஜக மூத்த நிர்வாகியும் , வழக்கறிஞருமான திரு.அஸ்வத்தாமன்., திருமாவளவன் மற்றும் பெரியார் you tube channel ஐ நிர்வகிப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 11 பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் உயதநிதி ஸ்டாலின், பிரசன்னாவை, தொடர்ந்து திருமாவவளவனும் ஹிந்துக்களின் உணர்வுகளை ஆபாசமாக வருணித்து தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார் என்றும், கறுப்பர் கூட்டத்தின் பின்னால் எப்படி திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்தது போல் திருமாவளவன் பின்னால் திமுக தலைவர் ஸ்டாலின் இப்போது உள்ளார் என்றும் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

குறிப்பாக பாஜக திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் திருமாவளவனை மிக மோசமாக சித்தரித்து டுவிட்டரில் பரப்பப்படும் ஹேஷ்டேக் மேலும், மேலும் டிரெண்ட் ஆகிவருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் திருமாவளவனை பலரும் படுமோசமாக விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியது தவறு என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். அவர் மேலும் கூறுகையில் " விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியது சரியா? அவர் பேசியது மிகவும் தவறு.

கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக இதுபற்றி வாய் திறக்காதது ஏன்? கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியதை திமுக, காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

மேலும் திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டில் உள்ளவர்களிடமே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார். குஷ்புவின் இந்த விமர்சனம் ஊடகங்கள் மூலம் ஏராளமானோரை சென்றடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு தலித் தலைவராக இருக்கும் திருமாவளவன் பாஜகவை எதிர்க்கவும், அதன் மூலம் சிறுபான்மையினரை மகிழ்ச்சியடைய செய்யவும் இந்து மதத்தை விமர்சிக்கிறார் என்றும் ஆனால் தனது தலித் இனத்தை வேறு யாரேனும் அவமானப்படுத்தும் போதோ, கேவலப்படுத்தும் போதோ அவர்கள் திமுகவினரை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர் பாராமுகமாக இருப்பதாகவும், தனது சொந்த அரசியல் நலன்களுக்காக அவர் தனது உணர்வையே அடமானம் வைப்பதாகவும் எதிர்தரப்பில் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், " தலைமை செயலகத்துக்கு மனு அளிக்க சென்றோம் அங்கே எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?", என்று கூறினார். இவருடைய இந்த பேச்சுக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் திமுகவும், திருமாவளவனும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தயாநிதியின் இந்த பேச்சை சரிவர கண்டிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது திருமாவளவன் தயாநிதி மாறன் தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கக் கூடாது, என்றாலும் அவர் உள் நோக்கத்துடன் பேசவில்லை என ஜகா வாங்கினார் என்றும், 2 எம்பி சீட்டுக்காக திருமாவளவன் திமுகவினரிடம் இப்படி அசிங்கப்படுவதா என்றும் சமூக ஊடகங்களில் கலாய்த்தனர்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் யாரோ அனுப்பிய ராணுவ வீரர்களின் போலிப்படத்தை வைத்து திருமாவளவன் இந்திய இராணுவத்தை கொச்சைப்படுத்தி அண்மையில் ஒரு டுவிட்டர் பதிவிட்டார். இந்த பதிவுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். சீனாவிற்கு இந்தியாவிற்கும் எல்லை பிரச்சனை வெடித்துள்ள நேரத்தில் இது போன்று தேசத்திற்காக பாடுபடும் இந்திய ராணுவ வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிடுவது வன்மையாக கண்டனத்துக்குரியது என்றும் அந்தப்படம் பாகிஸ்தானில் இருந்து எதிரிகள் அனுப்பிய படம் என்றும் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

அதற்கு திருமாவளவன் சமூக வலைதளங்களில் பரவும் இது போன்றவற்றை உண்மை போலி என கண்டறியும் திறன் எமக்கில்லை! முதலில் ஒரு படம் யாரோ அனுப்பியது. இப்போது வீடியோ ஒரு தம்பி அனுப்பியது! இல்லாததை மற்றும் பொல்லாததை இட்டுக்கட்டிச் சொல்லுவதால் எமக்கென்ன பயன்? என பதில் அளித்து அந்த விஷயத்திலும் அவர் வடிவேல் பாணியில் ஜகா வாங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சனாதன தர்மத்தை வேரறுக்க மாநாடு நடத்திய திருமாவளவன் அவரது அக்கா மறைவிற்கு பின் 16'ம் நாள் காரியத்தை வேத முறைப்படி யாகம் வளர்த்து நடத்தினார் என்றும், "மீண்டும் சனாதன சக்திகள் தலை எடுக்க கூடாது எனக் கூறிவிட்டு பிராமண வேதப்பண்டிதர்களை வீட்டுக்கு வரவைத்து, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு சட்டை அணியாமல் வேட்டி மட்டும் கட்டிக்

கொண்டதுடன் ஹோமமும் செய்தது ஏன் என்றும் விமர்சிக்கப்படுகிறார். மேலும் வாழை இலை போடப்பட்டு மதிய சாப்பாட்டுக்கு வந்து அவர் உட்கார்ந்தபோது சாப்பிடத் தொடங்கும் முன் இலையை சுற்றி 3 முறை தண்ணீர் சுற்றி முழு சனாதனத்தை அவர் பின்பற்றியதாகவும் சில காட்சிகள் தெரிவித்தன.

அதேபோல் தனது தந்தையின் இறுதி சடங்கு விவகாரங்களிலும் அவர் ஹிந்து சடங்குகளை விட்டுக் கொடுக்கவில்லை . இந்நிலையில் அரசியலுக்காக திமுக, தி.கவை கவரவும், கம்யூனிஸ்டுகளை கவரவும், குறிப்பாக வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினரை திருப்தி செய்யவுமே அவர் இந்து மதத்தை இழிவாய்ப் பேசி ஹிந்துக்களை அடிக்கடி புண்படுத்துகிறார் எனக் கூறப்படுகிறது.

திருமாவளவன் மட்டுமல்ல திராவிட கழகமும் சரி, திராவிட முன்னேற்ற கழகமும் சரி தன் வீட்டு பெண்களை சனாதன முறைப்படி சடங்குகளை பின்பற்ற சொல்கிறார்கள், ஆனால் ஊரார் வீட்டு பெண்களை மட்டும் கூப்பிட்டு அரசியல் மேடையில் தாலியை அறுக்கும் நிகழ்வை செய்கிறார்கள், இது இவர்களது போலி அரசியல் சம்பிரதாயமாக உள்ளத. எனவே மக்கள் இவர்களைக் கண்டு ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறி சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News