இனி தலித் அரசியல் எடுபடாது என தேர்தலுக்காக "மனுஸ்மிருதி" எதிர்ப்பு நாடகத்தை நடத்துகிறாரா திருமாவளவன்?
இனி தலித் அரசியல் எடுபடாது என தேர்தலுக்காக "மனுஸ்மிருதி" எதிர்ப்பு நாடகத்தை நடத்துகிறாரா திருமாவளவன்?
By : Kathir Webdesk
அரசியல்வாதிகளுக்கு தன்னை எப்பொழுது யாராவது பாராட்டிகொண்டே இருக்கவேண்டும் அல்லது திட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் முழு கவனத்துடன் இருப்பார்கள். காரணம் அடிக்கடி செய்திகளில் அடிபடும் விளம்பரம், மக்களின் விவாதத்தில் இடம், மற்ற கட்சிகளின் முன் ஓர் தனிச்சிறப்பு என எல்லாம் காரணமாகும்.
இதுவே தேர்தல் என வந்துவிட்டால் தேர்தலில் தனது கட்சியின் முக்கியதுவத்தை காண்பித்து அதன் மூலம் அதிக தொகுதிகள் கூட்டணி கட்சிகளில் வாங்கலாம் என்ற மனக்கணக்கில் தான் கூறும் கருத்துக்கள் மூலம் விருப்பு, வெறுப்பாளர்களை சம்பாதித்து அதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்வது ஓர் தந்திரமாகும். இந்த வகையில் திருமாவளவன் ஒர் யூக்தியை தற்பொழுது கையாண்டு வருகிறார் அது மனுஸ்மிருதி எதிர்ப்பு என்ற நாடக அரசியல்தான் அது. இல்லையெனில் இன்றைக்கு மனுஸ்மிருதியை எதிர்க்க அவசியம் என்ன?
ஒருபுறம் தி.மு.க கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் இல்லையேல் போகட்டும் என்று விரட்டாத குறையாக நடத்துகிறது, மறுபுறம் மற்ற கட்சிகளிலும் போதிய வரவேற்பு இல்லை. தேர்தல் வேறு நெருங்கியாகிவிட்டது. இந்த நிலையிலும் கூட ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து குறைந்தபட்சம் இரண்டு இலக்கங்களில் தொகுதிகள் வாங்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ள திருமாவளவனிற்கு இப்பொழுது மனுஸ்மிருதி மீது ஏன் அக்கரை?
மனுஸ்மிருதி என்ன நேற்று கண்டுபிடிக்கப்பட்டதா? அல்ல அதன் மீதான விமர்சனங்கள் இன்று தொடங்கியதா? அல்லது தமிழகத்தில் உள்ள போராட்டங்களில் எல்லாம் திருமாவளவன் போராடி களைத்துவிட்டாரா?
தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்பர், பட்டியலின மக்களின் பாதுகாவலன் என்றும் தன்னை விட்டால் தாழ்த்தப்பட்ட மக்களை காக்க ஆள் இல்லை என்ற பிம்பத்தில் கட்சி துவங்கி அதன் மூலம் பிரபலமாகி திராவிட கட்சிகளில் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திருமாவளவனுக்கு தற்பொழுது தாழ்த்தப்பட்டவர்களின் பிரஜை என்ற பிம்பம் எடுபடாமல் போய்விட்டது.
திராவிட கட்சிகளில் மாறி, மாறி கூட்டணி வைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரச்சினை என்றவுடன் கூட்டணி கட்சிகளின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்ற கீழ்த்தரமான அரசியல் எண்ணத்துடன் தன் கட்சியை பிழைக்க திருமாவளவன் நடத்தி கொண்டிருக்கிறார் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு குறிப்பாக அவரை நம்பி சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வந்துவிட்டது.
இதே நிலை நீடித்தால் நாளைக்கு எந்த கட்சியிலாவது ஏதாவது நாடகம் செய்து தொகுதிகளை வாங்கினால் கூட மக்களிடம் வாக்கு கேட்டு சென்றால் கண்டிப்பாக விரட்டியடிக்கப்டுவோம் என்று உணர்ந்த திருமாவளவன் தனது அரசியல் நாடகத்தை "தலித் அரசியலில்" இருந்து "மனுஸ்மிருதி அரசியலுக்கு" தற்காலிகமாக மாறியுள்ளார் அவ்வளவே தவிர அப்படியே மனுஸ்மிருதிக்கு எதிராக போராட வாழ்க்கை அர்ப்பணிப்பார் என்றெல்லாம் இல்லை. நாளைக்கே ஏதாவது ஒரு திராவிட கட்சி 10 முதல் 15 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் சிரித்துக்கொண்டே பிரச்சாரத்துக்கு கிளம்பிவிடுவார்.
இவ்வளவு ஏன் பிரச்சாரம் செல்லும் வழியில் கோவில் இந்துக்கள் இருந்தால் அப்படியே சிரிப்பு மாறாமல் கும்பிடு போட்டு ஒரு புகைப்படமும எடுத்துக்கொள்வார். இதுதான் திருமாவளவனின் அரசியல் போராட்டமே தவிர வேறு ஒன்றும் சரித்திர புகழ் போராட்டம் அல்ல! எல்லாம் கூட்டணி கட்சிகளின் தொகுதி பிச்சைக்குதான்.