Top
Kathir News
Begin typing your search above and press return to search.

வருமான வரித்துறையின் ஸ்கெட்சில் மாட்டிய கோவை தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்!

வருமான வரித்துறையின் ஸ்கெட்சில் மாட்டிய கோவை தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்!

வருமான வரித்துறையின் ஸ்கெட்சில் மாட்டிய கோவை தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Oct 2020 3:35 PM GMT

தி.மு.க கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை. ஊருக்கெல்லாம் நீதிமான் போன்று அறிவுரை வழங்குபவர்கள் கட்சி தி.மு.க. ஆனால் வருமான வரி ஏய்ப்பு போன்ற புகார்க்கு எல்லாம் ஒன்றும் குறைச்சல் இருக்காது.

கோவை மாநகர் தி.மு.க மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் பையா கவுண்டர் என்னும் ஆர்.கிருஷ்ணன். கோவை மாவட்ட தி.மு.க-வில் முக்கிய நிர்வாகியான இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து பேருக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று உதயநிதி பங்குபெற்ற கோவை போராட்டத்தில் இந்த பையா கவுண்டரின் பங்கு முக்கியமானது. அவர் முறையாக வருமான வரி செலுத்தாததும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது புகார் வந்ததால் இந்த நடவடிக்கை என கோவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story