Kathir News
Begin typing your search above and press return to search.

"ஒட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்" என அறிவாலய வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் - பதறியடித்த அறிவாலய வட்டாரம்.!

"ஒட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்" என அறிவாலய வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் - பதறியடித்த அறிவாலய வட்டாரம்.!

ஒட்டுன்னு போட்டா ரஜினிக்குதான் என அறிவாலய வாசலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் - பதறியடித்த அறிவாலய வட்டாரம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 5:37 PM IST

ரஜினியின் அரசியல் வருகையை நினைத்து யார் தூக்கம் இல்லாமல் இருக்கிறார்களோ இல்லையோ, தி.மு.க இரவு பகல் பாராமல் ரஜினியை பற்றிய நினைப்பாகவே இருக்கிறது போலும். நடக்கும் செயல்கள் அனைத்தும் தி.மு.கவின் எண்ணத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளது. இந்த வகையில் அறிவாலய வாசலில் "ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்" என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த நான்கு தினங்களாக ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது உடல்நிலை குறித்த கடிதம் வெளியானதாக தகவல்கள் கசிந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ரஜினி அவர்கள் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று சமூகவலைதளத்தில் "ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்" என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் வைரலாகியது. இதனையடுத்து இன்று காலை நேரத்தில் தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் "நீங்க வாங்க ரஜினி எங்க ஆதரவு உங்களுக்குதான்" "ஒட்டுன்னு போட்டா அது ரஜினிக்குதான்" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அறிவாலய சுவர்கள் முழுவதுமெ ஒட்டப்பட்டிருந்தது.

இதனால் ஏற்கனவே பயத்தில் சுற்றிகொண்டிருந்த உடன்பிறப்புகளுக்கு மேலும் பயம் அதிகமாகிவிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News