Kathir News
Begin typing your search above and press return to search.

அடி மேல் அடி.! சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம்.!

அடி மேல் அடி.! சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம்.!

அடி மேல் அடி.! சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம்.!

Saffron MomBy : Saffron Mom

  |  19 Nov 2020 6:44 AM GMT

பினராய் விஜயனின் கம்யூனிஸ்ட் LDF ஆட்சி, கேரளாவில் மொத்த குழப்பத்தின் ஒரு வடிவமாக உள்ளது. முதலில் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் ஐஏஎஸ் ஐ பல புலனாய்வு அமைப்புகளான NIA, ED விசாரித்து வருகின்றன. அவரது கூட்டாளியான சுவப்னா சுரேஷுக்கும் முதல்வரின் அதிகாரபூர்வமான இல்லத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.

பல மாதங்களாக பினராய் விஜயன் தனக்கு சுவப்னாவைத் தெரியாது தெரியாது என்றே கூறிவந்தார். பிறகு அவரை அந்த 'சர்ச்சைக்குரிய பெண்மணி' என்று குறிப்பிட்டார். பிறகு தன்னுடன் சேர்ந்து அவர் UAE கவுன்சில் ஜெனரல் ஐ பார்க்க சென்றதாக கூறினார்.

முதன்மைச் செயலாளர் சிவசங்கர், முதல்வர்தான் தன்னை ஸ்வப்னாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறியபோது, கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறி அவ்வப்போது நிபந்தனையுடன் மற்றும் பாதியாக உண்மைகளை ஒப்புக் கொள்ள நேரிட்டது. பிறகு, சிவசங்கரை சுவப்னாவுக்கு UAE மிசன் தலைவர் உடன் பயணித்த போது அறிமுகம் செய்திருக்கலாம் என்று கூறினார். ஆனால் அது தனக்கு நினைவில்லை, சிவசங்கர் தன்னுடைய வீட்டிற்கு வந்த போது கவுன்சில் ஜெனரல் மற்றும் ஸ்வப்னா அங்கு இருந்ததோ கூட தனக்கு அந்த அளவுக்கு தெளிவாக தெரியவில்லை என்று கூறினார்.

இதற்குப் பிறகு மிகவும் அவமானகரமான கைதான, கொடியேறி பாலகிருஷ்ணன் மகனான பினிஷ் கொடியேறியின் கைது வந்தது. கொடியேறி பாலகிருஷ்ணன் கேரளா சிபிஎம்மின் மிகவும் சக்திவாய்ந்த மாநிலச் செயலாளர் செயலாளர் ஆவார். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பினராய் விஜயனின் வலதுகை போன்றவர்.

அவரின் மகனை சில வாரங்களுக்கு முன்பு, அமலாக்கத்துறை பண மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக கைது செய்தது. சர்ச்சைக்குரிய சில தொழிலதிபர்கள் உடன் அவர் சேர்ந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பினீஷின் பினாமிகள் என்று கூறப்படுகிறது. பின்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் வசித்து வந்த வசதியான வாழ்க்கை குறித்தும் மற்றும் வங்கி கணக்குகள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

பா.ஜ.கவும், எதிர்க் கூட்டணியான UDF உம், சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பற்றியும் அவரது மகனுக்கு எதிராக வளர்ந்துவரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் தாக்கி வருகின்றனர். பினராயி மற்றும் கொடியேறி ஆகிய இருவரின் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகத்திற்கு இருக்கும் தொடர்பு தொடர்பாக பினராய் விஜயன் ராஜினாமாவையும், தன்னுடைய மகன் செய்துவரும் மோசடிகள் தொடர்பாக கொடியேறி பாலகிருஷ்ணனின் ராஜினாமாவையும் கோரி வருகின்றனர்.

ஒருவழியாக நவம்பர் 12ம் தேதி கொடியேறி பாலகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். ஆனால் அவர் வெளியேறியதற்குக் காரணமாக கூறப்பட்ட ஒரு வசதியான ஒரு காரணம், அவருடைய 'உடல்நிலை'. அவர் ஒரு மோசமான வியாதியை அனுபவித்து வருவதாகவும் அதற்காக அமெரிக்காவில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கேரள மக்கள் இதை நம்பும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல.

நவம்பர் 17ஆம் தேதி என்பிசி (போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம்) பினிஷைக் கைதுசெய்தது. தற்பொழுது சிபிஎம் மத்திய ஏஜென்சிக்களுக்கு எதிராக போராட்டங்களைத் தொடங்கியுள்ளது. கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை குலைக்க அவர்கள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் வசதியாக மறந்து விட்ட உண்மை என்னவென்றால், முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் தங்க கடத்தல் விவகாரம் வெளிவந்த பொழுது நம் நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதி ஒரு மத்திய ஏஜென்சி இந்த விசாரணைகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த விசாரணைகள் 'சரியான திசையில்' நடந்து கொண்டிருப்பதாக அவர் கருதிய பொழுது மற்ற மத்திய ஏஜென்சீஸ் மீதும் NIA மீதும் பாராட்டுகளை இதே முதல்வர்தான் பொழிந்தார். தற்பொழுது முதல்வரின் பிரைவேட் செகரட்டரி ரவீந்திரனை விசாரணைக்கு வருமாறு ஏஜென்சிகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இது இப்பொழுது மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக கம்யூனிஸ்ட் கட்சியால் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்று பினராயி கவலைப்படுகிறார். முதல்வரின் அலுவலகத்திற்குள் மத்திய ஏஜென்சிகள் நுழைவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இந்த பிரச்சனை போதாதென்று கேரள நிதியமைச்சர் டிஎம் தாமஸ் ஐசக் C&AG அறிக்கைகளுக்கு எதிராக கூறிய கருத்துக்களினால் கேலிக்கு ஆளாகியுள்ளார். அந்த அறிக்கையில் மத்திய தணிக்கை மையம், கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி தொடர்பாக பல வேறுபாடுகளை (anomolies) கண்டறிந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஐசக் ஊடகங்களிடம் இந்த மாதிரியான விவகாரங்கள் வெறும் டிராப்ட் அறிக்கையில் மட்டும்தான் இருந்தது என்றும், அது இறுதி அறிக்கை இல்லை என்றும் கூறி வருகிறார். ஆனால் கடைசியாக CA&G இது இறுதி அறிக்கை என்றும் டிராப்ட் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

தற்பொழுது பிஜேபி மற்றும் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் எப்படி ஒரு நிதி அமைச்சர் இந்த அறிக்கையை ஊடகங்கள் முன்னால் வெளியிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளது, ஏனெனில் இந்த அறிக்கை சட்ட மன்றத்தின் முன் வைக்கப்பட வேண்டியது ஆகும். அதுவரை நிதியமைச்சர் அதைப் பார்க்கவும் கூடாது அதை ஊடகங்களிடம் வெளியிடவும் கூடாது. எனவே ஐசக் தன்னுடைய அரசியல் அமைப்பு கடமைகளை எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்து மீறிவிட்டார். எனவே எதிர்க்கட்சிகள் தற்போது அவருடைய ராஜினாமாவையும் கோரியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News