திமுக எம்.எல்.ஏ., பூங்கோதை தற்கொலை முயற்சி.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சம்பவம் ஏன்?..
திமுக எம்.எல்.ஏ., பூங்கோதை தற்கொலை முயற்சி.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சம்பவம் ஏன்?..
By : Kathir Webdesk
திமுக எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் எம்.எல்.ஏ., பூங்கோதை நெல்லை மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எதற்காக தற்கொலை முயற்சி செய்தார் என்று இன்னும் சரியாக காரணம் வெளியாகவில்லை.
பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ., திமுக ஆட்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக வெற்றி பெற்றார். மீண்டும் இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். கட்சியின் செல்வாக்கான எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவரது தந்தை ஆலடி அருணா மூன்று முறை ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது இவருக்கு அதிகமான பற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுகவில் ஏற்கனவே இவரது குடும்பத்திற்கு இருந்த அரசியல் செல்வாக்கு என வலம் வந்த இவர் தற்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக எம்எல்ஏ பூங்கோதையின் இந்த முடிவு கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஒரு வேளை தலைமையிடம் எதாவது பிரச்சனையாக அல்லது குடும்பத்தில் பிரச்சனையா என்பது பற்றி விரைவில் தெரியவரும்.