இரசாயன தொழிற்சாலைகளால் பாழாகும் ராணிப்பேட்டை - அக்கரை காட்டாத தி.மு.க எம்.எல்.ஏ
இரசாயன தொழிற்சாலைகளால் பாழாகும் ராணிப்பேட்டை - அக்கரை காட்டாத தி.மு.க எம்.எல்.ஏ
By : Mohan Raj
விவசாய பூமியிலும், ஆறுகள் பாயும் மற்றும் கலக்கும் இடங்களிலும் இரசாயன தொழிற்சாலைகளை அமைப்பது வாழும் தலைமுறையை மட்டுமல்ல வரும் தலைமுறைகளைகூட பாதிக்கும். அவ்வித இரசாயன தொழிற்சாலைகள் தண்ணீர் வளங்களை உறிச்சுவதுடன் அப்பகுதி மண் வளத்தையும் மலடாக்கிவிடும் மேலும் சுவாசிக்கும் காற்றில் அதன் நச்சு கலந்து அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சுவிடும். இதனாலேயே தமிழகத்தில் பல பகுதிகளில் இவ்வித தொழிற்சாலைகளை அனுமதிப்பதில்லை குறிப்பாக ஆறுகள் பாயும் பகுதிகளில் இதனை நிறுவுதல் கூடவே கூடாது.
ஆனால் ராணிப்பேட்டையில் பாலாறும், பொன்னையும் பாயும் பகுதியில் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன தொழிற்சாலைகள் இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியும் அதனை அப்பகுதி தி.மு.க எம்.எல்.ஏ காந்தி கண்டுகொள்ளாமல் உள்ளார்.
ராணிப்பேட்டை சிப்காட்டில் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும் தமிழ்நாடு குரோமியத் தொழிற்சாலையில் 2.27 லட்சம் மெட்ரிக் டன் அளவு குரோமியக் கழிவு மலைபோல் தேங்கிக்கிடக்கிறது. இதனால் 3,500 வகையான ரசாயன மாசு நேரடியாக நிலம், நீர், காற்று ஆகியவற்றில் கலந்து, மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குரோமியக் கழிவுகளின் வீரியத்தைக் குறைத்து வேறு மெட்டீரியலாக மாற்றுவதற்கோ அல்லது அப்புறப்படுத்துவதற்கு அப்பகுதி எம்.எல்.ஏ காந்தி ஏதும் செய்யவில்லை என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாலறு மற்றும் பொன்னை என இரண்டு வளமிக்க ஆறுகள் பாய்ந்து சங்கமிக்கும் இடமான ராணிப்பேட்டையில் இப்படி சில இரசாயன தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் ஆயிரக்கணக்கான லிட்டர் உறிச்சப்படுவதுடன் அங்குள்ள மண் வளத்தை விவசாயம் செய்ய தகுதியற்றதாகவும் மரம், செடிகள் கூட வளர்க்க தகுதியில்லாததாகவும் மாற்றி வருகின்றன.
இப்படி இயற்கையை அதன் வளத்தை பாழ்படுத்தும் இரசாயன தொழிற்சாலைகள் முறையான சுத்திகரிப்பு வழிமுறைகளை கூட பயன்படுத்தவில்லை இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த பகுதி தி.மு.க எம்.எல்.ஏ காந்தியோ ஏதும் நடவடிக்கை கூட எடுக்காமல் அமைதியாக இருப்பதால் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ காந்தியின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
இவ்வளவிற்கும் எம்.எல்.ஏ காந்தி அப்பகுதியில் செல்வாக்கான மனிதர் ஆனால் இரசாயன தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் ஏதும் பணம் வாங்கிகொண்டு கண்டுகொள்ளாமல் உள்ளாரா என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றனர் ராணிப்பேட்டை பகுதி மக்கள்.
இவ்வளவிற்கும் எம்.எல்.ஏ காந்தி ராணிப்பேட்டை தொகுதியில் 1996, 2006, 2016 தேர்தல்கள் என மூன்று முறை எம்.எல்.ஏ'வாகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இப்படி மூன்று முறை எம்.எல்.ஏ'வாக இருந்தும் இப்படி தன்னை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்திலும், ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கூட அக்கரை இல்லாமல் செயல்பட்டு வருவது அவரின் அலட்சியத்தை காட்டுகிறது அல்லது யாருக்கோ விசுவாசமாக இருக்க தன்னை நம்பி வாக்களித்த மக்களை பலி கொடுக்கும் செயலையும் குறிக்கிறது.
Source - ஜூனியர் விகடன்.