மருத்துவர்கள் அறிவுரை.. கோவாவுக்கு பறந்த சோனியாகாந்தி.!
மருத்துவர்கள் அறிவுரை.. கோவாவுக்கு பறந்த சோனியாகாந்தி.!
By : Kathir Webdesk
உடல் நலனை கருத்தில் கொண்டு சில மாதங்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா டெல்லியிலிருந்து வெளியேறி வேறு இடத்தில் தங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அவர் கோவா தலைநகர் பனாஜிக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவருடன் ராகுல்காந்தியும் வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக, பல முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை காரணமாக தலைவர் பதவியில் இருந்தும் சற்று விலகியே இருந்து வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து சோனியா மீண்டும் இடைக்கால தலைவர் ஆக பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கனவே, ஆஸ்துமா பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வரும் சோனியாவுக்கு, நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளதால், டெல்லியில் இருந்து வெளியேறி, வேறு இடத்திற்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.