"நாங்கள் அஞ்சமாட்டோம், திட்டமிட்டபடி நாளை வேல் யாத்திரை நடைபெறும்" - பா.ஜ.க வழக்கறிஞர்.!
"நாங்கள் அஞ்சமாட்டோம், திட்டமிட்டபடி நாளை வேல் யாத்திரை நடைபெறும்" - பா.ஜ.க வழக்கறிஞர்.!
By : Mohan Raj
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. இதுவரை கூட்டணி கட்சிகளை அமைப்பதில் குறிவைத்து காய்களை நகர்த்தி கொண்டிருந்த கட்சிகள் அதன் அடுத்த கட்டமாக வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியையும், தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் பெயருடன் வாக்காளர் பெயர் பட்டியலையும் இணைத்து ஆராய துவங்கிவிட்டனர். இந்த நிலையில் தான் தி.மு.க'வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தி.மு.க வாக்காளர்களை வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து திட்டமிட்டு நீக்கிட ஆளும் அ.தி.மு.க முயற்சி செய்வதாக பகீர் குற்றசாட்டை எழுப்பியுள்ளார்.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபடும் பாகநிலை அலுவலகர்களிடம் (BLO) அ.தி.மு.க வைச் சேர்ந்த பாகநிலை முகவர்கள் (BLA-2) தி.மு.க.விற்கு தொடர்ந்து வாக்களித்து வரும் வாக்காளர்களின் வரிசை எண்ணை, வாக்காளர் பட்டியலில் வட்டமிட்டு குறிப்பிட்டு, அவர்களின் பெயரை நீக்கம் செய்திட திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆதாரத்துடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமைக் கழக வழக்கறிஞர் இரா.நீலகண்டன் ஆகியோர் இன்று (7.11.2020) காலை, சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். தலைமை தேர்தல் அலுவலர் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இதர கட்சிகள் வலம் வருகையில் தோற்றால் என்ன காரணம் கூறுவது என தி.மு.க இப்பொழுதே தயார் ஆகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.