உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.. மேளத்தாளத்துடன் வரவேற்க பா.ஜ.க., தயார்.!
உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகை.. மேளத்தாளத்துடன் வரவேற்க பா.ஜ.க., தயார்.!
By : Kathir Webdesk
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (21.11.2020) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வருகை புரிகிறார்.
இதன் பின்னர் விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க., நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. இதில், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்படுகிறார்.
வழி நெடுகிலும் பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். 14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.