சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் திட்டம்.!
சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் திட்டம்.!
By : Kathir Webdesk
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பயணத்திட்டம் குறித்து காண்போம்:
பிற்பகல் 1.40 மணிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் சென்னை வருகை
பிற்பகல் 1.55 மணியளவில் காரில் சென்னை அடையாறு எம்.ஆர்.சி., நகரில் உள்ள லீலா பேலஸ்க்கு செல்கிறார். அங்கு 2 மணி முதல் 4.15 வரை முக்கிய நபர்களுடன் சந்திப்பு.
மாலை 4.15 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வருகை புரிகிறார்.
மாலை 4.30 மணிக்கு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
மாலை 6.15 மணிக்கு கலைவாணர் அரங்கத்திலிருந்து புறப்பட்டு லீலா பேலஸ் சென்றடைகிறார்.
மாலை 6.30 மணிக்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மறு நாள் காலை 10.15 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.