தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரு பெண் இரவில் நடந்து செல்ல முடியாது - ராசாவுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது.?
தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரு பெண் இரவில் நடந்து செல்ல முடியாது - ராசாவுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது.?
By : Muruganandham M
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா மீண்டும் சிறை செல்வது உறுதி என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு பெண் இரவில் நடந்து செல்ல முடியாது.
ஆனால் நம் ஆட்சியில் பெண்கள் சுதந்திரமாக செல்ல முடியும், இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று குறை கூறி வருகிறார். எப்பொழுதும் பணியாற்றுபவர்களை குறை கூறி கொண்டே இருப்பார். இதனாலேயே இவரை மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டனர். இவரின் பேச்சை மக்கள் கேட்க மாட்டார்கள்.
எனவே 2021 மட்டுமில்ல 2026 சட்டமன்ற தேர்தலிலும் கழகம் தான் வெற்றி பெறும். ராசாவும், கனிமொழியும் சிறை செல்வது உறுதி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி தவிக்கும் ராசாவுக்கு அம்மாவை பற்றி பேச அருகதையில்லை. ராசாவுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், திமுகவின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முதலமைச்சர் மீது வீண்பழி சுமத்துகிறார்கள். அதே பாணியில் நாங்கள் பதிலடி கொடுப்போம். ஒரு கட்சி ஆரம்பித்து அடுத்து முறையே ஆட்சியை பிடித்தது என்றால் அதுவும் கழகம் தான். தமிழகத்தை அதிகமான ஆண்டுகள் ஆண்ட கட்சியும் கழகம் தான். அம்மா ஆட்சியில் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகமான திட்டங்களை நிறைறே்றினார்.
எம்.ஜி.ஆர். திமுகவுக்காக உழைத்ததால் தான் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் அவரை ஒதுக்கி விட்டார் கருணாநிதி. ஆனால் சோர்வடையாமல் தனியாக ஒரு கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் வென்று முதலமைச்சரான பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.