முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல் - பா.ஜ.கவை கண்டு மிரள்கிறதா ஆளும்கட்சி?
முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தல் - பா.ஜ.கவை கண்டு மிரள்கிறதா ஆளும்கட்சி?
By : Saffron Mom
ஹைதராபாத் GHMC உள்ளாட்சி தேர்தல்கள் பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்னோக்கியே நடத்த அறிவித்ததன் மூலம் மற்றொரு ஆச்சரியமான முயற்சியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) கட்சி எடுத்துள்ளது.
தற்பொழுது தேர்தல்கள் டிசம்பர் 1ஆம் தேதி நடக்க உள்ளது. அதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இதற்கு முன்னால் வந்த தகவல்களின்படி, ஹைதராபாத்தில் சமீபத்திய கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை TRS காத்திருக்கும் என்று கூறப்பட்டது. ஏனெனில் பிப்ரவரி 10ற்குள் மட்டுமே இந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் சட்டமாகும்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஆளுங்கட்சி TRSன் வசம் இருந்த டுபாக்கா சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், பா.ஜ.க ஆளும் கட்சியையே வீழ்த்தி தனது இரண்டாவது சட்டமன்ற உறுப்பினரை சட்டமன்றத்திற்கு அனுப்புகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த டிஆர்எஸ், பா.ஜ.கவிற்கு தேர்தலுக்கு தயாராகும் நேரத்தை குறைத்து வழங்குவதற்காக இப்படி தேர்தல்களை முன்கூட்டியே அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஹைதராபாத், டிஆர்எஸ் மற்றும் ஒய்வாசி ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது.
அதை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஆனால் பா.ஜ.க இங்கு உள்ள அரசியல் நிலைமை தங்களுக்கு சாதகமாக வேகமாக மாறி வருவதாக நம்புகிறது. GHMCயில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன அதில் 75 லாவது நன்றாக செயல்பட வேண்டும் என்று பா.ஜ.க இலக்கு நிர்ணயித்துள்ளது.
2016இல் இதில் 4 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.கவால் வெற்றிபெற முடிந்தது, எனவே இப்பொழுது இவ்வளவு தூரம் இலக்கு வைக்கும் அளவிற்கு பா.ஜ.கவிற்கு ஆதரவும் நம்பிக்கையும் கூடி இருக்கிறது என்பதே உண்மையாகும்.
ஹைதராபாத் தேர்தல்களை நிர்வகிக்க, பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்த அனுபவமுள்ள பொதுச் செயலாளர் புபேந்தர் யாதவை பா.ஜ.க ஏற்கனவே நியமித்துள்ளது. இது உள்ளாட்சி மற்றும் உள்ளூர் அளவில் தங்கள் கால்தடம் பதிக்க பா.ஜ.க எவ்வளவு ஆர்வமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
சட்டத்தின்படி, மாநில தேர்தல் ஆணையம் முதல்வரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே தேர்தல் தேதியை உள்ளாட்சி தேர்தலுக்கு அறிவிக்க முடியும். இதைப் பயன்படுத்திக் கொண்ட டிஆர்எஸ் பலவிதமான நிவாரண பணிகளை கொரானா மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று காரணம் காட்டி அள்ளி தெளித்து உள்ளது.
உதாரணமாக சொத்து வரி குறைப்பு, சம்பள உயர்வு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பது என்று பலவிதமான விஷயங்களை அறிவித்த பிறகு தான் தேர்தல் தேதிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
KCR ன் அடுத்த அரசியல் வாரிசு என்று பரவலாக அறியப்படும் அவரது மகன் மற்றும் நகராட்சி அமைச்சர் கே டி ராமாராவ் தன்னுடைய முழு திறனை காட்டுவதற்காக இத்தேர்தல்களில் களம் இறங்கியுள்ளார்.
டிஆர்எஸ்ன் நற்பெயருக்கும் அதிகாரத்திற்கும் ஒரு ஆபத்து வந்துள்ளது எனவே ஹைதராபாத் நகரம் ஒரு கடுமையான போட்டிக்கு தயாராக உள்ளது.