"உங்களை போல் ஊழல் செய்து சம்பாரிக்காமல் ஆடு வளர்த்து பிழைப்பவன் நான்" என தி.மு.கவினரை விளாசிய அண்ணாமலை.!
"உங்களை போல் ஊழல் செய்து சம்பாரிக்காமல் ஆடு வளர்த்து பிழைப்பவன் நான்" என தி.மு.கவினரை விளாசிய அண்ணாமலை.!
By : Mohan Raj
கரூரில் நடந்ந பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள் தெரிவித்ததாவது, "தி.மு.கவினர் எனக்கு தொடர்ந்து பல அடைமொழி பெயர்களை வைக்கின்றனர். இப்பொழுது 13வது அடைமொழி பெயராக 'ஆட்டுப்புழுக்கை அண்ணாமலை' என பெயர் வைத்துள்ளனர். என் பெற்றோர், ஆடு வளர்த்துதான் என்னை படிக்க வைத்தனர். நானும் இன்றும் ஆடு வளர்த்து வருகிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "கரூர் மாவட்டத்தில் பல தொகுதிகளில் மக்களின் நிரந்தர தொழிலாக ஆடு வளர்ப்பு இருந்து வருகிறது. மணல் மூலமாகவும், பலருக்கு வேலை வாங்கி தருகிறேன் என்ற வகையில் ஊழல் செய்தவர் நீங்கள்" என கரூரை சேர்ந்த தி.மு.க முக்கிய எம்.எல்.ஏவை சாடினார்.
மேலும், "நாங்கள் ஊழல் செய்து சம்பாரிக்காமல் ஆட்டுப்புழுக்கையை அள்ளித்தான் வாழ்கிறோம். இன்று காலையில் கூட வீட்டில் ஆட்டுப்புழுக்கையை அள்ளி போட்டு விட்டுதான் வருகிறேன். எனக்கு நீங்கள் அடை மொழியை தந்துள்ளீர்கள். இதை நான் ஏற்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "அதே நேரத்தில் இதற்கு ஆடு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க சின்னத்தில் பட்டனை அழுத்தி தக்க பதிலடியை தருவார்கள், நீங்கள் என்னை அவமானபடுத்தவில்லை அவமானப்படுத்தியது கரூர் மாவட்ட மக்களைத்தான்" என பேசினார்.