Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க குடும்ப கட்சி இல்லை என்றால், துரைமுருகனை முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா?

தி.மு.க குடும்ப கட்சி இல்லை என்றால், துரைமுருகனை முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா?

தி.மு.க குடும்ப கட்சி இல்லை என்றால், துரைமுருகனை முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா?

Muruganandham MBy : Muruganandham M

  |  25 Nov 2020 6:45 AM GMT

குடும்ப ஆதிக்க கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கொரோனா தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இரண்டாம் கட்ட தாக்குதல் இருக்கும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலுமே அரசியல் கட்சிகளின் பரப்புரைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அளவுகோலும், வேறுபாடுகளும் இல்லை.

தி.மு.க போன்ற குடும்ப ஆதிக்கம் செலுத்தும் கட்சிகள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தன் மகனை அரசியலுக்கு கொண்டு வந்து, தி.மு.க-வினரைப் போல பரம்பரை பரம்பரையாக நாங்கள் அரசியல் பதவிகளை பறிக்கவில்லை. கழகத்தில் கொடி பிடிக்கும் அடிப்படை தொண்டன் கூட முதலமைச்சராக முடியும்.

இந்த நிலை தி.மு.க-வில் சாத்தியமா? துரைமுருகனை முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா? சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கட்சி தலைமை ஆலோசித்து கூட்டணி கட்சிகளுக்கான முடிவை அறிவிக்கும். இதில் யூகங்களுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்த போது, திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும், ஊழல் அரசியல் குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News